Stock Market Update: பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..!
இன்று காலை முதல் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
![Stock Market Update: பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..! Stock Market Update BSE Sensex climbs 416 points to 59279 in opening trade Nifty rises 117 points Stock Market Update: பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/57dbce412842579bec6a7205ac4a69ff_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளன. அதன்படி பிஎஸ்இ காலையில் 416 புள்ளிகள் அதிகரித்து 59729 புள்ளிகளாக தொடங்கியுள்ளது. அதேபோல் நிஃப்டி 117 புள்ளிகள் அதிகரித்து 17,700ஆக உள்ளது. மேலும் சென்செக்ஸ் 500 புள்ளிகள் அதிகரித்து காணப்படுகிறது.
டாலருக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு 74.76ஆக தற்போது இருந்து வருகிறது. இன்று காலை முதலே அசோக் லெய்லாண்ட், எய்ச்சர் மோட்டர்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. டெக் மஹிந்திராவின் பங்குகள் இன்று காலை முதல் மிகவும் சரிந்து காணப்படுகின்றன. மேலும் வங்கிகளில் பங்குகளில் கோடக் மஹிந்திரா, ஐடிஎஃப்சி வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் சற்று உயர்ந்து காணப்படுகின்றன. இன்று நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளை தொடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் ஐசிஐசிஐ டெரெக்ட் உள்ளிட்ட சில அமைப்புகளின் பங்குகளும் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
முன்னதாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெ தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பங்குச்சந்தையில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. நேற்று காலையில் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து காணப்பட்ட சென்செக்ஸ் இறுதியில் 848 புள்ளிகள் அதிகத்துடன் நிறைவு செய்தது. அதேபோல் நிஃப்டி நேற்று 17,550 புள்ளிகளுடன் பங்குச்சந்தையை நிறைவு செய்தது.
சர்வதேச அளவில் காணப்படும் மந்தநிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 58 ஆயிரம் புள்ளிளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,
நேற்றைய நிலவரத்தின்போது சென்னைசெக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப்பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் இருந்து தப்பவில்லை. இந்த வீழ்ச்சிப் பட்டியலில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 5.98 சதவீதம் சரிந்து முதலிடத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: அதிரடியாக குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதுதான்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)