Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 19,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகும் நிஃப்டி!
Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது.
Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 458.04 அல்லது 0.73 % புள்ளிகள் அதிகரித்து 64,378.05 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 125.45 அல்லது 0.66% புள்ளிகள் உயர்ந்து 19,101. 70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
மாருதி சுசூகி, எம் அண்ட் எம், சன் பார்மா, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். இந்தஸ்லேண்ட் வங்கி, ஹீரோ மோட்டகார்ப், டெக் மஹிந்திரா, டாடா மோட்டர்ஸ், விப்ரோ, ஈச்சர்ஸ் மோட்டர்ஸ், டிவிஸ் லேப், ஹெச்.சி.எல். டெக், பவர்கிரிட் கார்ப், சிப்ளா, டாக்டர், ரெட்டி லேப்ஸ், கோல் இந்தியா,பஜார்ஜ் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், பாஜார்ஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
அதானி போர்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., லைப், அதானி எண்டர்பிரிஸ், பிரிட்டானியா, ஐ.சி.ஐ.சி. வங்கி, ஐ.டி.சி., டாடா கான்ஸ் ப்ராட், கோடாக மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. இந்த வாரம் முழுக்க நிஃப்டி 19 புள்ளிகள் வர்த்தமாகியது.
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக நேர தொடக்கத்தில் ஏற்றுத்துடன் தொடங்கி வர்த்தகமாகின. சென்செக்ஸ் 64,300 புள்ளிகளில் வர்த்தகமாகியது. இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.-யின் பங்கும் லாபத்துடம் வர்த்தகமாகியது.
மேலும் வாசிக்க.
Latest Gold Silver Rate 30 June 2023: ஹேப்பி நியூஸ் மக்களே; குறைந்தது தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?
Ponmagan Scheme: ஆண் குழந்தைகளுக்கான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ - சிறப்புகள் என்ன? முழு விவரம்!