மேலும் அறிய

Share Market : சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை...! சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிவு..! முழு விவரம் உள்ளே...

Share Market : வெள்ளிக்கிழமையான இன்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன.

Share Market : வெள்ளிக்கிழமையான இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன.

வர்த்தக நேர முடிவில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 134.67 புள்ளிகள் சரிந்து 61,615.93 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50.70  புள்ளிகள் சரிந்து 18,293.20 புள்ளிகள் வர்த்தகமாகின. இந்நிலையில், பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தன.

காலை நிலவரம்:

இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 179.28 புள்ளிகள் அதிகரித்து 61,929.88 புள்ளிகளாகவும் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50.7 புள்ளிகள் அதிகரித்து 18,394.60 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.

லாபம்-நஷ்டம்

பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.சி.எல். டெக், ஹெச்.யு. எல்., ஏஷியன் பெயிண்ட்ஸ் , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகேந்திரா,  டாட்டா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்,டெக் மகேந்திரா,பவர் கிரிட், அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

மாருதி சுசூகி, எம்&எம்., இண்டஸ்லேண்ட் வங்கி, பஜார்ஜ் ஃபினான்ஸ், என்.டி.பி.சி., பாரதி ஏர்டெல், ஐ.டி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, பஜார்ஜ் ஃபின்சர்வ், டைட்டன் நிறுவனம், சன் ஃபார்மா, நெஸ்லே, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, லார்சன், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

பணவீக்கம்

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்த  போதிலும் வட்டி விகிதம் பெரிதாக உயராது என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில்  பணவீக்கம் குறைந்து 6.77% ஆக சரிந்துள்ளது.

மீண்டும் சூடுபிடிக்கும் போர்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நோட்டா நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் தீடீர் ஏவுகணை தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா இடையிலானா போர்  மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தை பாதிக்கும் சூழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் உயருமா?

அமெரிக்காவில் பணவீக்கம்  எதிர்பார்த்த அளவுக்கு கடந்த மாதம் அக்டோபரில் உயரவில்லை. இதனால் பெடரல் வங்கி வட்டி விகிதத்தையும் பெரிதாக உயர்தாது என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் வட்டிவீதம் உயர்த்தப்படும் என்பதில் மாற்றமில்லை என கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் (டிசம்பர் 7) அன்று வட்டி விகிதம் குறித்து முடிவு அறிவிக்கப்படும்.

மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் இன்று காலை வார்த்தைகம் சரிவில் காணப்பட்டது.

ரூபாயின் நிலவரம்

இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 10 காசுகள் அதிகரித்து 81.54 ரூபாயாக ஆக உள்ளது.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget