Share Market : இன்று ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...லாபத்தில் பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி...
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 183.9 புள்ளிகள் உயர்ந்து 62,865.74 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 61.5 புள்ளிகள் உயர்ந்து 18,679.55 புள்ளிகளாக உள்ளது.
Sensex climbs 183.9 points to 62,865.74 in early trade; Nifty advances 61.5 points to 18,679.55
— Press Trust of India (@PTI_News) November 30, 2022
அமெரிக்காவில் பணவீக்கம் சற்று தளர்ந்து வரும் நிலையில், வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தாது என்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடும் சற்று அதிகரித்தது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனை கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாதகமான சூழ்நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் உள்நாட்டு முதலீடுகளும் சற்று அதிகரித்தது.
லாபம் - நஷ்டம்
பஜாஜ் ஆட்டோ, ஹின்டல்கோ, எம்&எம், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், சிப்ளா, யுபிஎல், கோடக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், அதாணி போர்ட்ஸ், லார்சன், அப்போலா மருத்துவமனை, ஹிரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபின்சர்வு, எச்டிஎஃப்சி லைஃப், டைட்டன் கம்பெனி, கோல் இந்நியா, டிசிஎஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகுள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், மாருதி சுசிகி, டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், ஐஓசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு:
சீனாவில், கொரோனா தொற்று காரணமாக, ஜீரோ கோவிட் திட்டம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. இதனால் கச்சா எண்ணேய் விலை குறைந்தது. இதன் காரணமாக டால்ருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது.
Rupee rises 13 paise to 81.59 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) November 30, 2022
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 13 காசுகள் அதிகரித்து 81.59 ரூபாயாக ஆக உள்ளது.