மேலும் அறிய

Share Market: சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை....100 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்...முதலீட்டாளர்கள் கவலை...

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 113 அல்லது  0.19 % புள்ளிகள் குறைந்து 60,549.83 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 45.35 அல்லது 0.33% புள்ளிகள் குறைந்து 17,826.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாகவே பங்குச்சந்தை மந்தமாகவே உள்ளது. ஏற்றத்தில் தொடங்கினாலும் சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் மந்தமாகவே இருந்தன. இந்நிலையில், இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

லாபம்-நஷ்டம்

கிராசிம், பஜாஜ் பின்சர்வ், எச்டிஎஃப்சி லைப், லார்சன், ரிலையன்ஸ், ஏசியன் பையின்ட்ஸ், பிரிட்டானியா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, டிசிஎஸ், ஹின்டல்கோ, இன்போசிஸ், நெஸ்டீலே, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹிரோ மோட்டோகோர்ப், சிப்ளா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசிகி, அப்போலோ மருத்துவமனை, எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டெட்டன் கம்பெணி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

காரணம்

கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச வளர்ச்சி, சீனாவில் கொரோனா தாக்கம் என பல காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டியை தொடர்ச்சியாக 6ஆவது முறையாக நேற்று உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், லாபம் ஈட்டுவதிலேயே ஆர்வத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

ரூபாயின் மதிப்பு:

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்து 82.59 ரூபாயாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
Embed widget