Stock Market Update: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 129 புள்ளிகள் உயர்வு - இன்றைய வர்த்தக நிலவரம்
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகியது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
வாரத்தின் முதல் நாளின் வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 64,892.43 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 10.95 அல்லது 0.058 % புள்ளிகள் சரிந்து 19,277.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
சிப்ளா, பி.பி.சி.எல்., அதானி எண்டர்பிரிசிஸ், மாருது சுசூகி, ஹீரோ மோட்டர்கார்ர்ப், லார்சன், டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, பவர்கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஹெச்.டி.எஃப்.சி., ஜெ.எஸ்.டபுள்யு. ஸ்டீல், ஐ.டி.சி., அதானி போர்ட்ஸ், ஓன்.என்.ஜி.சி., ரிலையன்ஸ், பாரத ஸ்டேஸ் வங்கி, டாடா மோட்டர்ஸ், க்ரேசியம், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஹெச்.சி.எல்., பிரிட்டானியா, பாரதி ஏர்டெல்,நெஸ்லே, பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டைட்டன் கம்பெனி, டி.சி.எஸ்., டெக் மகேந்திரா, டிவிஸ், லேப்ஸ், டாக்டர். ரெட்டி லேப்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
ஆசிய - பசிபிக் பகுதியில் பங்குச்சந்தை லாபத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. சந்தையில் நிலவும் நிலையற்றதன்மையை சமாளிப்பதற்காக சீனா புதிய அறிவிப்புகளை வெளியிட்டது பங்குச்சந்தை லாபத்துடன் வர்த்தகமாக தொடங்கியது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது, சீனாவின் புதிய அறிவிப்பு உள்ளிட்டவற்றால் எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 15 நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வார வர்த்தகத்தின் இறுதிநாளில் சென்செக்ஸ் 490 புள்ளிகளில் வரை குறைந்து 64 ஆயிரம் புள்ளிகளாக வர்த்தகமாகியது. இன்று லாபத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.82.55 ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தநேர முடிவில் இது ரூ.82.65 ஆக இருந்தது.
RIL AGM 2023
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஜியோ IPO, க்ரீன் எனர்ஜி, ஜியோ நிறுனத்தின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ஜியோ ஃபைனான்ஸியஸ் சர்வீசஸ் நிறுவனம், தனியாக பிரிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட்-21ம் தேதி பங்குகள் பட்டியலிடப்பட்டது, ஆனால், மூன்று நாள்களில் சென்செக்ஸ், நிஃப்டி இண்டெக்ஸ்களில் இருந்து ஜியோ ஃபைனான்ஸியஸ் பங்கு நீக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதியன்று வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு ஜியோ சென்செக்ஸ்/ நிஃப்டி இண்டெக்ஸில் இருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 64,896.83 ஆகவும், நிஃப்டி 12:00 புள்ளிகள் அதிகரித்து 19,277.80 ஆக வர்த்தகமாகியது. 1,836 பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 1098 பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. 158 பங்குகள் மாற்றமின்றி தொடர்ந்தன.