![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Share Market: வார முதல் நாளில் சற்று ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி...ஏற்றத்தில் எஸ்.பி.ஐ பங்குகள்
Share Market Today: இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிந்தது முதலீட்டாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.
![Share Market: வார முதல் நாளில் சற்று ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி...ஏற்றத்தில் எஸ்.பி.ஐ பங்குகள் Share Market closed for today end street Session rose Sensex and nifty points 2023 march 27th Share Market: வார முதல் நாளில் சற்று ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி...ஏற்றத்தில் எஸ்.பி.ஐ பங்குகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/4134df29b140aac71236be65feae1e2c1679915790185571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 126.76 புள்ளிகள் அதிகரித்து 57,653.86 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 40.65 புள்ளிகள் அதிகரித்து 16,985.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி இன்று மிகவும் ஏற்ற இறக்கமான வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. ஏற்ற இறக்கங்களை கண்ட அது இறுதியில் சுமார் 40 புள்ளிகள் அதிகரித்து பச்சை நிறத்தில் முடிந்தது.
Sensex climbs 126.76 points to finish at 57,653.86; Nifty gains 40.65 points to 16,985.70
— Press Trust of India (@PTI_News) March 27, 2023
லாபம்-நஷ்டம்:
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, சன் பார்மா, எஸ்பிஐ ஆகிய பங்குகள் ஏற்றத்திலும், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பிஎஸ்இ-யில் ஏஐஏ இன்ஜினியரிங், பாரத் வயர் ரோப்ஸ், கேரியர் பாயிண்ட், சையண்ட் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
துறைகளை பொறுத்தவரை ஆட்டோமொபைல், கேப்பிட்டல் குட்ஸ், பவர் மற்றும் ரியாலிட்டி துறைகளின் பங்குகள் 0.5 முதல் 2 சதவீதம் வரை சரிந்தன.
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய நாள் வர்த்தக முடிவில் பங்குச் சந்தை சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பு:
Rupee rises 3 paise to close at 82.37 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) March 27, 2023
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் அதிகரித்து 82.37 ஆக உள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
Also Read: Gold, Silver Price: ஹாப்பி நியூஸ்.. குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம் இதுதான்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)