Share Market : ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை...ஏற்றத்தில் எஸ்பிஐ, விப்ரோ...
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
இன்றைய நாள் தொடக்கத்தில் , இந்திய பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியது. அதையடுத்து, இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் முடிவடைந்தது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 142.43 புள்ளிகள் அதிகரித்து 60, 806 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 21.75 புள்ளிகள் அதிகரித்து 17,893.45 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
Sensex climbs 142.43 points to end at 60,806.22; Nifty advances 21.75 points to 17,893.45
— Press Trust of India (@PTI_News) February 9, 2023
இன்றைய நாள் தொடக்கத்தில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 113 அல்லது 0.19 % புள்ளிகள் குறைந்து 60,549.83 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 45.35 அல்லது 0.33% புள்ளிகள் குறைந்து 17,826.35 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
கடந்த மூன்று நாட்களாகவே பங்குச்சந்தை மந்தமாகவே உள்ளது. ஏற்றத்தில் தொடங்கினாலும் சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் மந்தமாகவே இருந்தன. இந்நிலையில், இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
லாபம் நஷ்டம்:
நிஃப்டி 50ல் அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.
ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டாணியா, எஸ்பிஐ விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
ரிசர்வ் வங்கி:
இதுமட்டுமின்றி, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டியை தொடர்ச்சியாக 6ஆவது முறையாக நேற்று உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூபாயின் மதிப்பு
Rupee settles on flat note, gains 1 paisa to close at 82.53 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) February 9, 2023
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசுகள் அதிகரித்து 82.53 ரூபாயாக உள்ளது.