Stock Market: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு!
Stock Market: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 220.30 அல்லது 0.31 % புள்ளிகள் குறைந்து 71,88.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 97.90 அல்லது 0.45% சரிந்து 21,834.45 ஆக வர்த்தகமாகியது.
நேற்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை, இன்றைய நாளில் சரிவுடன் தொடங்கியிருக்கிறது. ரெப்போ விகிதத்தில் ஆறாவது முறையாக எந்த மாற்றமும் இல்லையென மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ் துறையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. வர்த்தக நேர தொடக்கதில் 200 புள்ளிகள் சென்செக்ஸ், காலை 11.05 மணி நிலவரப்படி 604.55 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது.இந்த நிதியாண்டின் பணவீக்கம் முதல் மற்றும் 4-வது காலாண்டு காலத்திற்கான கணிப்பு மதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள்,பஞ்சாப் நேசனல் வங்கி, பேங்க ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் இன்றைய வர்த்தக நேரத்தில் 4% பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
பவர்கிரிட் கார்ப், பாரத ஸ்டேட் வங்கி, பி.பி.சி.எல்., ஹிண்டால்கோ, ஹெட்.சி.எல்., டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப். சி லைஃப்’ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
பிரிட்டானியா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, டாடா கான்ஸ் ப்ராட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், கோடாக் மஹிந்திரா, யு.பி.எல்., மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டிவிஸ் லேப்ஸ்,ஜெ.எஸ்.டபுள்யூ, லார்சன், பஜாஜ் ஃபின்சர்வ், க்ரேசியம், பாரதி ஏர்டெல், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, சிப்ளா, ஓ.என்.ஜி.சி., விப்ரோ,ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், டாக்டர், ரெட்டீஸ் லேப்ஸ், என்.டி.பி.சி.ம், டாடா மோட்டர்ஸ்,இன்ஃபோசிஸ், சன் பார்மா, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, அப்பல்லோ மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
கடந்த இரண்டு நாட்களாக பேடிஎம் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், இன்றைக்கு சரிந்துள்ளது. மதிய நேர வர்த்தகத்தில் பங்குச்சந்தை சரிவிலிருந்து மீளுமா என்ற முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றன.