RBI to Card Transactions : பணப் பரிவர்த்தனை கார்ட் விதிமுறைகளில் மாற்றம்.. வங்கிகளுக்குக் கால அவகாசம் அளித்த ரிசர்வ் வங்கி!
கிரெடிட், டெபிட் முதலான கார்ட்களுக்கான விதிமுறைகளுள் சிலவற்றை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு வரும் ஜூன் 30 வரை வழங்கியிருந்த கால அவகாசத்தை நீட்டித்து வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
கிரெடிட், டெபிட் முதலான கார்ட்களுக்கான விதிமுறைகளுள் சிலவற்றை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு வரும் ஜூன் 30 வரை வழங்கியிருந்த கால அவகாசத்தை நீட்டித்து வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், `துறைசார் வல்லுநர்கள் பலரின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிந்துரைகளுக்குப் பிறகு, கார்ட்களுக்கான முதன்மை வழிகாட்டியின் சில விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான காலகட்டம் வரும் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்றுவரை நீடிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியன் வங்கிகள் அசோசியேஷன் சார்பில் கார்ட்களுக்கான முதன்மை வழிகாட்டியில் மாற்றங்கள் கொண்டு வருவதற்காக 6 மாதங்கள் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்தது.
கிரெடிட் கார்ட் பெற்று 30 நாள்கள் வரை வாடிக்கையாளர் அதனை ஆக்டிவேட் செய்யாமல் இருக்கும் சூழலில், அதனை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்களிடம் ஓடிபி ரகசிய எண் மூலம் ஒப்புதல் பெறுவதற்கான விதிமுறை உருவாக்குவதற்கு மட்டுமே இதுவரை ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளரின் அனுமதியின்றி கடன் தொகையின் வரம்பு மீறப்படக்கூடாது எனவும், கட்டணம் செலுத்தப்படாததற்கு வட்டி விதிக்கக்கூடாது எனவும் மற்றொரு விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும், நிதி தொழில்நுட்பம் சார்ந்த விதிமுறைகளில் இதுவரை எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நிதி தொழில்நுட்ப நிறுவனங்களான ஸ்லைஸ், யுனி, ஒன்கார்ட், PayU, LazyPay, ஜூபிட்டர் முதலானவற்றின் இயங்கும் முறையில் மாற்றங்கள் கொண்டுவர விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது.
இந்த மாற்றங்களின் மூலமாக நிதி தொழில்நுட்ப நிறுவனங்களால் கார்ட் மூலமாக நடத்தப்பட்ட பரிவர்த்தனைகளின் தகவல் விவரங்களைப் பெற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் செலவுகளின் மூலமாக அவர்களுக்குக் கூடுதல் ரிவார்ட்களை அளித்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்கும் இந்த நிறுவனங்களால் இனி அவ்வாறு செயல்பட முடியாது. இதனால் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தொழில் பாதிப்பு ஏற்படும்.
நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் டெல்னாலஜி சர்வீஸ் ப்ரொவைடர் என்று தனியாக தொழில்நுட்பத்தை உருவாக்கி அதன் மூலம் பயனாளர்களின் தகவல்களைப் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. டெல்னாலஜி சர்வீஸ் ப்ரொவைடர் என்ற இந்தத் தொழில்நுட்பத், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குக் கீழ் இருந்து வங்கிகளுக்கு அனுமதி வழங்குகிறது. இனி நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியாக பயனாளர்களின் தகவல்களைப் பெற முடியாத போதும், இந்த வழியில் பெறலாம்.
இந்தப் பணிகளை முழுவதுமாக முடிப்பதற்காக வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறைகள் அமேசான், ப்ளிப்கார்ட், ஜொமாடோ முதலான ப்ராண்ட்களால் வழங்கப்படும் நிதி சேவைகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.