மேலும் அறிய

2 Thousand Rupee Note: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு வந்தது முடிவு.. எப்படி மாற்றுவது..? எவ்வளவு தொகை மாற்றலாம்..?

ரூபாய் 2 ஆயிரம் தாள்கள் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியர்கள் யாருமே நவம்பர் 8-ந் தேதியை மறக்கவே மாட்டார்கள். ஏனென்றால், 2016ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியே பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு பிறகு நாட்டில் புதியதாக ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

2018ம் ஆண்டே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை மட்டுமே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லுபடியாகும். அதுவரை மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம்.

வங்கிகளில் மாற்றுவது எப்படி?

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். அதற்கான கால அவகாசம்தான் வரும் செப்டம்பர் 30-ந் தேதி ஆகும். இதன்படி, பொதுமக்கள் வரும் 23-ந் தேதி முதல் நாட்டில் உள்ள எந்தவொரு வங்கிக்கிளைகளிலும்  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அளித்து மாற்றிக்கொள்ளலாம்.

இதன்படி, ஒருவர் ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை மட்டுமே வங்கியில் மாற்ற முடியும். அதற்கு மேல் மாற்ற முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாலும், பலரும் போன் பே. கூகுள் பே, கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதாலும் பெரும்பாலான இடங்களில் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

குறைந்த புழக்கம்:

இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் கடந்த 2016-ஆம் ஆண்டு வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது போல, மீண்டும் வங்கிகளில் வரிசைகள் காணப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த முறை ரிசர்வ் வங்கி போதிய அவகாசத்தை வழங்கியுள்ளது.

தற்போதுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் 2017ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அவற்றின் மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் முடிவடைகிறது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூபாய் 6.73 லட்சம் கோடியில் இருந்து ரூபாய் 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், பொதுமக்களின் ரூபாய் நோட்டுகளின் தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:2 Thousand Rupees Note: மக்களே... ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது - ரிசர்வ் வங்கி அதிரடி

மேலும் படிக்க: Karnataka Politics: அடம்பிடிக்கும் சீனியர்கள்.. பாடம் கற்காத காங்கிரஸ்.. பயன்படுத்திக்கொள்ளும் பாஜக..! 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Embed widget