மேலும் அறிய

டாடா விற்ற பங்குகள்.. ரூ.900 கோடி சம்பாதித்த தொழிலதிபர்..

டாடா விற்ற பங்குகளை வாங்கி ரூ.900 கோடி சம்பாதித்துள்ளார் தொழிலதிபர். அதுவும் ஒரே மாதத்தில் அவர் இந்த பெருந்தொகையை சம்பாதித்திருக்கிறார். அவரின் பெயர் ராகேஷ்  ஜுன்ஜுன்வாலா.

டாடா விற்ற பங்குகளை வாங்கி ரூ.900 கோடி சம்பாதித்துள்ளார் தொழிலதிபர். அதுவும் ஒரே மாதத்தில் அவர் இந்த பெருந்தொகையை சம்பாதித்திருக்கிறார். அவரின் பெயர் ராகேஷ்  ஜுன்ஜுன்வாலா.

ராகேஷ்  ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்குச்சந்தை முதலீட்டில் முக்கியத்துவம் பெற்றவர்.

ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனர். இதுதவிர, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் பங்கு வகிப்பவர் தான் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இந்தியப் பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ஒரே மாதத்தில் ரூ.900 கோடி சம்பாதித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு இந்தியாவின் வாரன் பஃபெட் என்ற செல்லப்பெயரும் உள்ளது. அதேபோல் இந்தியப் பங்குச்சந்தையில் பிக் புல் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.

இந்த மாதம் பங்குச்சந்தையில் ஒரு சில நிறுவனங்களின் பங்கு விற்பனை தொடர்ந்து ஏற்றம் கண்டன. டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பெனி அந்த ஒரு சில நிறுவனங்களில் அடங்கும். டாடா மோட்டார்ஸ் பங்குவிற்பனை இந்த மாதம் 13% வரை அதிகரிக்க, டைடன் கம்பெனி பங்குகள் 11.40%  வரை அதிகரித்தது.

இந்த இரண்டு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ததன் வகையிலேயே ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு ரூ.893 கோடி லாபம் கிடைத்துள்ளது.

2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு போக்கை கூர்ந்து கவனித்தால், ராகேஷ் 3,77,50,000 பங்குகளை வைத்துள்ளார். செப்டம்பர் 2021ல் டாடாவின் ஆட்டோ பங்குகள் விலை ரூ.287.30 என்றளவில் இருந்தன. செப்டம்பர் 2021ல் டாடா மோட்டார்ஸ் பங்குகளின் வாயிலாக மட்டும் ராகேஷ் ரூ.164.9675 கோடி ஈட்டியுள்ளார். அதேபோல் டைட்டன் பங்குகளின் போக்கை ஏப்ரல் முதல் ஜூன் 2021 காலகட்டத்தில் கண்காணித்தாலும் பிக் புல்,  3,30,10,395 பங்குகளை வைத்துள்ளார். அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா 96,40,575 பங்குகளை வைத்திருந்தார். இருவரும் சேர்ந்து மொத்தம்  4,26,50,970 பங்குகளை வைத்திருந்தார். செப்டம்பரில் டைட்டனின் பங்கு விற்பனை ரூ.1921.60 முதல் ரூ.2092.50 வரை சென்றன. ஒரு பங்கின் விலை கிட்டத்தட்ட ரூ.170.90 வரை அதிகரிக்க ராகேஷ் ரூ.728.90 கோடி ஈட்டியுள்ளார்.

இதனால் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா, டைடன் பங்குகளின் மீதான முதலீட்டின் வாயிலாக மட்டும் செப்டம்பர் மாததில் ரூ.893.87 கோடி   (ரூ728.90 கோடி +   ரூ164.97 கோடி) ஈட்டியுள்ளார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கைதேர்ந்த பட்டயக் கணக்கரும் கூட. இவர் எப்போதுமே நிதி, தொழில்நுட்பம், மருந்துத் துறை பங்குகளில் அதிகம் முதலீடு செய்வார்.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget