(Source: ECI/ABP News/ABP Majha)
Rakesh Jhunjhunwala: பங்குச்சந்தையின் கில்லி! "இந்தியாவின் வாரன் பஃபட்" - யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா?
ஏற்கனவே உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும், சில வாரங்களுக்கு முன்புதான் சிகிச்சைகள் முடிந்து அதே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மூத்த முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். "இந்தியாவின் வாரன் பஃபட்" என்று அழைக்கப்பட்ட இவர் தொட்டதெல்லாம் தங்கம் ஆக மாறும் என்று விளையாட்டாகக் கூறுவதையே உண்மையாக்கி காட்டியவர்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்
நமக்கு கிடைத்துள்ள தகவல் படி, இவர் இன்று காலை 6:45 மணியளவில் கேண்டி ப்ரீச் மருத்துவமனைக்கு கொண்டு செலப்பட்டுள்ளார். உடனடியாக அங்கேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் சிறுநீரகம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிடுகிறது. ஏற்கனவே உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும், சில வாரங்களுக்கு முன்புதான் சசிகிச்சைகள் முடிந்து அதே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
யார் இவர்?
வணிகர் மற்றும் பட்டயக் கணக்காளர் (CA), மற்றும் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அவர், ஆகாசா ஏர் வெளியீட்டு விழாவில் கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின்படி இவரின் சொத்து மதிப்பு $5.8 பில்லியன் ஆகும். முதலீடுகளை தனது முதன்மையான வருமான ஆதாரமாக கொண்டு சுயமாக உருவாக்கியவர். ஜுன்ஜுன்வாலா ஹங்காமா மீடியா மற்றும் ஆப்டெக் ஆகிய நிறுவனங்களின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா மற்றும் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றின் இயக்குநராகவும் இருந்தார்.
பங்குச்சந்தை ஆரம்பம்
வருமான வரித்துறை அதிகாரியின் மகனான ஜுன்ஜுன்வாலா கல்லூரியில் படிக்கும் போதே பங்குகளை வாங்கத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் CA படிப்பிற்காக சேர்ந்தார், ஆனால் பட்டம் பெற்ற பிறகு, ஆடிட்டர் வேலை செய்யாமல், நேரடியாக பொருளாதாரம் சார்ந்த வேலைகளில் களம் இறங்கினார். ஜுன்ஜுன்வாலா 1985 இல் ரூ.5000 மூலதனத்தில் முதலீடு செய்தார். அந்த மூலதனம் செப்டம்பர் 2018 க்குள் ரூ.11,000 கோடியாக வளர்ந்தது. அவரது தந்தை தனது நண்பர்களுடன் பங்குச் சந்தை பற்றி விவாதித்ததைக் கேட்டதும், ஜுன்ஜுன்வாலா அதில் ஆர்வம் காட்டதுவங்கியதாக முன்பு கூறியிருக்கிறார்.
பங்குச்சந்தையில் கில்லி
டாடா குழுமத்தின் ஒரு பகுதியான கடிகாரம் மற்றும் நகைகள் தயாரிப்பாளரான டைட்டன் அவரது மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட ஹோல்டிங் ஆகும். இரண்டு நிறுவனங்களும் 2021 இல் பட்டியலிடப்பட்டபோது, ஸ்டார் ஹெல்த் மற்றும் அலிட் இன்சூரன்ஸ் மற்றும் மெட்ரோ பிராண்டுகள் மீதான ஜுன்ஜுன்வாலாவின் ஆரம்ப பந்தயம் பலனளித்தது குறிப்பிடத்தக்கது. ஜுன்ஜுன்வாலா தனது தந்தையை மேற்கோள் காட்டி, அவர் தொடர்ந்து செய்தித்தாள்களைப் படித்தார், ஏனெனில் ஒவ்வொரு செய்தியும் செய்தி பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளது என்று கூறுகிறார். அவரது தந்தை அவரை பங்குச் சந்தையில் ஈடுபட அனுமதித்திருந்தாலும், அவர் நிதி உதவி வழங்க மறுத்ததாக ஏற்கனவே கூறி உள்ளார், தனது நண்பர்களிடம் பணம் கேட்பதையும் தடுத்ததாக கூறி இருந்தார். ஆனால் அதை மீறியும் அதில் வெற்றிகண்டு எழுந்து வந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்