மேலும் அறிய

Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா... இன்றைய நிலவரம் இது தான்!

பெட்ரோல், டீசல் விலை 218ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இன்றைய விலை

இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 218ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று (டிச.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது.  

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. காலையிலேயே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Gold Rate Today: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. காலையிலேயே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
Embed widget