Petrol and diesel prices Today: மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை!

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US: 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு  ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  


இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த 16ஆம் தேதி  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தும், எந்த மாற்றமும் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.94.86க்கும், இதேபோல், ஒரு லிட்டர் டீசல்  ரூ.88.87க்கும் விற்பனை செய்யப்பட்டது. 



Petrol and diesel prices Today: மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை!


இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.


கடந்த சில நாட்களாக விலை நிலையாக இருந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் அவர்கள் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சில தினங்களுக்கு முன்பு, திமுக அறிக்கையில் அறிவித்ததுபோல, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை நிலையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை



டெல்லி - பெட்ரோல் 93.04, டீசல் 83.80


கொல்கத்தா - பெட்ரோல் 93.11, டீசல் 86.64


மும்பை -  பெட்ரோல் 99.31, டீசல் 91.01


 


தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் பங்குகள் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாகன பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விற்பனை பாதிப்பை சந்திக்கும்.

Tags: petrol price diesel price Petrol and diesel price Petrol Price Today Rise petrol price today Petrol and diesel price rise petrol price today

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: அது நேத்து... இது இன்னைக்கு... குறைந்த தங்கம் உயர்ந்தது!

Gold Silver Price Today: அது நேத்து... இது இன்னைக்கு... குறைந்த தங்கம் உயர்ந்தது!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Petrol and diesel prices Today: ரூ.98யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.92யை தாண்டிய டீசல்!

Petrol and diesel prices Today: ரூ.98யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.92யை தாண்டிய டீசல்!

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

டாப் நியூஸ்

BREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

BREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!