![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Petrol, Diesel Price : 44வது நாளாக அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை..!
Petrol, Diesel Price : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 44வது நாளாக மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகிறது.
![Petrol, Diesel Price : 44வது நாளாக அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை..! petrol and diesel price on 4th july 2022 Petrol, Diesel Price : 44வது நாளாக அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/2158e543ca315b37bec6fbb0d55cdef1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை 44வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.24க்கும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
![Petrol, Diesel Price : 44வது நாளாக அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/022e1d3e8078639e903049c3e34d2b1d_original.jpg)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)