மேலும் அறிய

Paytm:ஓராண்டில் இல்லாத அளவு சரிவு! தொடர் சறுக்கலில் பேடி எம் நிறுவன பங்குகள்!

கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு பேடி எம் நிறுவன பங்குகள் மிகக்குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது.

இணையதள வளர்ச்சிக்கு பிறகு இந்தியாவில் இணையதள பணப்பரிவர்த்தனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

போன் பே பங்குகள் சரிவு:

இந்தியாவில் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதில் செயலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் பேடி எம் முக்கிய செயலியாக உள்ளது. பேடி எம் செயலி நிறுவனம் கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் பேடிஎம்- ன் பங்குகள் சரியத் தொடங்கியது. இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் 20 சதவீதம் சரிந்து ரூபாய் 487.20 ஆக இருந்தது. அதாவது, கடந்த ஓராண்டில் (52 வாரங்களில்) பேடி எம் பங்குகள் மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 40 சதவீதம் பேடி எம் பங்குகள் சரிந்துள்ளது.

ஆர்.பி.ஐ. நடவடிக்கை:

Paytm Payments Bank Limited-க்கு எதிராக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை முதலே அந்த நிறுவனம் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. ஆர்.பி.ஐ. நடவடிக்கையை சமாளிக்க முடியும் என்று பேடி எம் கூறினாலும், ஆர்.பி.ஐ. நடவடிக்கையால் பேடி எம் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொருளாதார நிபுணர்கள் பேடி எம் நிறுவனத்திற்கு எதிரான ஆர்.பி.ஐ. மேற்கொண்ட நடவடிக்கையால் 300 கோடி முதல் 500 கோடி வரை பாதிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. பேடி எம் நிறுவனத்தின் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் உங்கள் அபிமான செயலி செயல்படுகிறது. பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு வழக்கம்போல செயல்படும் என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்தியாவில் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் பல தரப்பு மக்களால் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் பேடி எம் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் ஆர்.பி.ஐ. மேற்கொண்ட நடவடிக்கை, பங்குச்சந்தை சரிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் பேடி எம் நிறுவனத்திற்கு இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Stock Market: சரிவை சந்தித்த பேடிஎம் - ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

மேலும் படிக்க: Budget 2024: அப்படி போடு! அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட்! - அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jio IPO: இந்திய சந்தையில் புது வரலாறு..! ஜியோ ப்ளாட்ஃபார்ம் IPO பங்குகள் - ரூ.7.4 லட்சம் கோடிக்கு ஏலம்
இந்திய சந்தையில் புது வரலாறு..! ஜியோ ப்ளாட்ஃபார்ம் IPO பங்குகள் - ரூ.7.4 லட்சம் கோடிக்கு ஏலம்
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Embed widget