மேலும் அறிய

October Rule Changes: ஏடிஎம் சேவை முதல் சிலிண்டர் பெறுவது வரை.. அக்டோபரில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. நோட் பண்ணுங்க!

October 1 Financial Changes: ஒவ்வொரு மாதமும் தேவைகள் மற்றும் சேவைகளைப் பொறுத்து பல்வேறு துறை சார்ந்த மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அப்படியாக 2026 அக்டோபர் மாதம் மக்களை பாதிக்கக்கூடிய பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது

அக்டோபர் மாதத்தில் வங்கி சேவைகள் தொடங்கி எல்பிஜி சிலிண்டர் மானியம் வரை பல விஷயங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். 

ஒவ்வொரு மாதமும் தேவைகள் மற்றும் சேவைகளைப் பொறுத்து பல்வேறு துறை சார்ந்த மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அப்படியாக 2026 அக்டோபர் மாதம்  வங்கிச் சேவைகள், கடன் பெறுதல், சேமிப்பு, வரி மற்றும் வீட்டுச் செலவுகளைப் பாதிக்கக்கூடிய பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது.. நீட்டிக்கப்பட்ட வரி தணிக்கை மற்றும் வருமான வரி அறிக்கை (ITR) தேதிகள், திருத்தப்பட்ட எஸ்பிஐ ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகள், மற்றும் குறிப்பிட்ட அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்கான புதிய யுபிஐ எம்டிஆர் கட்டணம் என பல மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையானது ஏற்பட்டுள்ளது. 

அக்டோபரில் வெளிவரவிருக்கும் மாற்றங்கள் 

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC)   அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7 வரை ஆலோசனை நடத்தவுள்ளது. கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் கொள்கை முடிவின்படி, மத்திய வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றுமா அல்லது மாற்றாமல் வைத்திருக்குமா என்பது தீர்மானிக்கப்படும்.  ஆகஸ்ட் மாத கொள்கை ஆய்வுக்குப் பிறகு, ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக இருந்தது. இந்த மாற்றம் கடன் மற்றும் வைப்பு விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எப்போதும் அதிக கவனம் பெறும். 

அதேபோல் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை விதிகளின் கீழ் வரும் வரி செலுத்துவோருக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. மேலும் வரி தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி தணிக்கை விதிகளின் கீழ் வரும் வரி செலுத்துவோருக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 21 ஆம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் வீட்டு உபயோக சிலிண்டர் மானியத்துடன் பெற வேண்டும் என்றால்   பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்கள் மற்றும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களில் தங்களது எஸ்பிஐ டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் இலவச மாதாந்திரப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை எஸ்பிஐ திருத்தி அமைத்துள்ளது. அதன்படி இதுவரை 10 முறை இந்த வசதி இருந்த நிலையில் தற்போது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் லைட் திட்டங்களின் கீழ் சந்தாதாரர்களிடமிருந்து நேரடி சேவை மையங்கள் வசூலிக்கக்கூடிய கட்டணங்களைத் திருத்தியுள்ளது. ஒவ்வொரு ஓய்வூதிய எண்ணுக்கும் ஒரு முறை செலுத்தும் அறிமுகக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget