மேலும் அறிய
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Gold and silver rate today
Source : twitter
ஏறி இறங்கும் தங்கம் விலை
- செப்டம்பர் 30-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,09,680 ரூபாய்க்கு விற்பனை.
- அக்டோபர் 1-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,09,440 ரூபாய்க்கு விற்பனை.
- அக்டோபர் 2-ம் தேதி கிராம் ஒன்று 95 ரூபாய் அதிகரித்து 13,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 1,10,200 ரூபாய்க்கு விற்பனை.
- அக்டோபர் 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,675 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,09,600 ரூபாய்க்கு விற்பனை.
- அக்டோபர் 4-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த ஒரு நாள் அதிகரித்தால் மறுநாள் குறைவது என ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 13675 ரூபாய்க்கும், சவரன் 1,09,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
தங்கத்தை போல வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 245 ரூபாய்க்கும்,. கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















