Stock Market Update: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை; 20 ஆயிரம் புள்ளிகளை நெருங்கும் நிஃப்டி- வரலாற்றில் உச்சம்!
Stock Market Update:இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகிவருகிறது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் நிஃப்டி முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது.
வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 237.02 அல்லது 0.36% புள்ளிகள் உயர்ந்து 66,835.92 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 85.25 அல்லது 0.51 % புள்ளிகள் உயர்ந்து 19,921.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
அதானி போர்ட்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, ஹெச்.டி.எஃப்.சி. லைப், அதானி எண்டர்பிரைசிஸ், விப்ரோ, ஹெட்.சி.எல்., எஸ்.பி.ஐ., மாருதி சுசூகி, டாக்டர்.ரெட்டி லேப்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், நெஸ்லே, டாடா மோட்டர்ஸ், டி.சி.எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன்,ரிலையன்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், கொடாக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, க்ரேசியம், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பஜார்ஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, டிவிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்டஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
கோல் இந்தியா, பவர்கிட் கார்ப், சிப்ளா, இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
வர்த்த நேரத்தில் 1951 பங்குகள் ஏற்றத்துடனும், ந்1044 பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகியது. 130 பங்குகள் மாற்றமின்றி தொடர்ந்தன.
அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்ப்ரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 2% உயர்ந்தன. வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் நிஃப்டி வரலாறு காணத அளவு உயர்ந்திருந்த்து. சென்செக்ஸ், நிஃப்டி உள்ளிட்டவற்றில் எல்லா நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
இந்திய ரூபாய் மதிப்பு விவரம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரித்து 82.93 ஆக உள்ளது.
மேலும் வாசிக்க..AR Rahman: ‘இளையராஜாவை பார்த்து கொஞ்சம் கத்துக்கோங்க’... ஏ.ஆர்.ரஹ்மானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!