Crime News: ஆசைக்காட்டி மோசம்.. டெலிகிராம் குழுவில் இணைந்த பெண்ணிடம் ரூ.4 லட்சம் அபேஸ்!
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். அதற்காக பங்குச்சந்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை நாடினார்.

பங்கு சந்தை தொடர்பான டெலிகிராம் செயலி குழுவில் இணைந்த பெண் ஒருவர் ரூ.4 லட்சத்தைப் பறிகொடுத்த சம்பவம் மும்பையில் அரங்கேறி உள்ளது.
மும்பையின் நஹூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் தொடர்ச்சியாக பொருளாதார முன்னேற்றக்கூடிய வழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். அதற்காக பங்குச்சந்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை நாடினார். அதன் வழியாக டெலிகிராம் செயலி தொடர்பான சாதாரணம் விளம்பரம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பார்த்துள்ளார். அதில் பங்குச்சந்தை குறிப்புகள் மற்றும் வர்த்தகம், முதலீடு செய்வதற்கான வழிகாட்டுதல் தெரிவிக்கப்படும் என கூறப்பட்ட ஒரு குழுவில் அப்பெண் இணைந்துள்ளார். அந்த குழுவும் மிகவும் ஆக்டிவாக எப்போதும் அடுத்தடுத்து மெசெஜ்கள், முதலீடு சந்தேகத்திற்கான தீர்வுகள் என இயங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வழிகாட்டிகள், பங்கு விளக்கப்படங்கள், வர்த்தக அழைப்புகள் மற்றும் முதலீட்டு லாபம் போன்றவை பற்றி அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் உரையாடல்கள் இருந்தது. நீங்கள் முதலீடு செய்வதால் எந்தவித பண இழப்பு போன்ற ஆபத்துகள் இல்லை, வருமானம் மட்டுமே என உறுதிமொழியையும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆரம்பத்தில் அந்த பெண் ரூ. 120, ரூ. 200, ரூ. 500 என சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார். உங்களுக்கு இருப்பது வீண் சந்தேகம் என அந்த குழுவைச் சேர்ந்த அனுபவசாலிகள் என காட்டிக் கொண்டவர்கள் சிறிய தொகையை கொடுத்த தருணத்தில் ரசீதுகள் போல தோற்றமளிக்கும் லாபம் ஏற்பட்டதாக கூறப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களை அனுப்பியுள்ளனர். அதில் உங்கள் பங்கு அடையும் லாபம், உயரும் எண்கள் என அனைத்தும் இடம் பெற்றிருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த பெண் குழுவில் இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அனைத்தையும் கற்றுக் கொள்ளும் இடமாக அந்த குழு மாறியது.
இப்படியான நிலையில் டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை மூன்று நாட்களில் அந்த பெண் பல தவணைகளாக தனது அக்கவுண்டில் இருந்து பணத்தை மாற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும், ஒரு புதிய UPI ஐடி அல்லது வங்கிக் கணக்கு எண் அனுப்பப்பட்டு இன்பாஸில் வந்து சேர்ந்தது. முதலீட்டு குவியலை உருவாக்கலாம் என பேராசைப்பட்டு தொடர்ந்து பணம் செலுத்தினார். அதற்கேற்ப லாபம் கிடைப்பதாக ஸ்க்ரீன்ஷாட்களும் அனுப்பப்பட்டது.
இப்படியான நிலையில் அவளுடைய மொத்த வருமானமும் முதலீட்டு தொகையாக செலுத்தப்பட்டது. கிட்டதட்ட ரூ.3.8 லட்சத்தைத் தாண்டியபோது அந்த குழுவில் லாப ஸ்கிரீன்ஷாட்கள் வருவது நின்றுபோனது. இதனால் பதறிப்போன அந்த பெண் செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு கோரிக்கை விடுக்க குரூப்பில் எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்துள்ளது. அவருக்கு அட்வைஸ் கொடுத்த வல்லுநர்கள் எல்லாம் காணாமல் போயினர். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் காவல்துறையில் புகாரளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பல கணக்குகள் மூலம் பணம் அனுப்பப்பட்டதை உறுதி செய்தனர். அவை பெரும்பாலும் யுபிஐ கணக்குடன் இணைக்கப்பட்டவை. அதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தை உரிமத்திற்கு தகுதியான எந்த தரகரும் தனிப்பட்ட கணக்குகளில் முதலீட்டுப் பணத்தை சேகரிக்க மாட்டார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று பணம் செலுத்தி ஏமாந்தால், அல்லது ஏமாற்றப்படுவதாக உணர்ந்தால் உடனடியாக 1930 ஐ அழைத்து புகாரளிக்கவும் அல்லது cybercrime.gov.in இல் புகாரளிக்கவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















