FDI For States: வெளிநாட்டு முதலீட்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது எவ்வளவு? இந்தியாவில் முதலிடம் யாருக்கு?
FDI For States: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்பதங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FDI For States: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு 6வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள்:
ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்க விரும்புகிறது. முதலீட்டாளர்கள் தொழில்துறைக்கு ஏற்ற பகுதிகளில் முதலீடு செய்கிறார்கள். குறிப்பாக அந்நிய நேரடி முதலீடு வந்தால் தங்கள் பகுதிகள் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு என பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா ஆதிக்கம்:
இந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த முதலீடுகளில் 52 சதவிகிதம் மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளது. அதாவது தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பொதுவாக குஜராத் அல்லது கர்நாடகா முதலீடுகளில் முதலிடத்தில் இருக்கும். ஆனால் இப்போது மகாராஷ்டிரா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மகாராஷ்டிராவுக்கு மொத்தம் 70,795 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. இரண்டாவது இடத்தில் கர்நாடகா வந்துள்ளது. இருப்பினும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுக்கு வந்துள்ள முதலீடுகளின் மதிப்பில் பெரும் இடைவெளி உள்ளது. கர்நாடகாவுக்கு ரூ. 19,059 கோடி முதலீடுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மூன்றாவது இடத்தில் டெல்லி ரூ. 10,788 கோடி பெற்றிருக்க, தெலுங்கானா நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதலீடுகள் எவ்வளவு?
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்ததில் குஜராத் 5வது இடத்தில் இருக்க தமிழ்நாட்டிற்கு ஆறாவது டம் மட்டுமே கிடைத்துள்ளது. ஹர்யானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜாஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ராஜஸ்தான், ரூ. 311 கோடி மட்டுமே முதலீடாக பெற்றுள்ளது. மற்ற பத்தொன்பது மாநிலங்களுக்கு அந்த அளவு முதலீடு கூட கிடைக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
1. மகாராஷ்டிரா - ரூ.70,795 கோடி
2. கர்நாடகா - ரூ.19,059 கோடி
3. டெல்லி - ரூ.10,789 கோடி
4. தெலங்கானா - ரூ.9,023 கோடி
5. குஜராத் - ரூ.8,508 கோடி
6. தமிழ்நாடு - ரூ.8,325 கோடி
7. ஹரியானா - ரூ.5,818 கோடி
8. உத்தரபிரதேசம் - ரூ.370 கோடி
9. ராஜஸ்தான் - ரூ.311 கோடி
மறுபுறம், எளிதாக தொழில் தொடங்குவதில் கேரளா முதலிடத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும், முதலீடுகளை ஈர்த்த முதல் பத்து மாநிலங்களில் கேரளா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் பயணங்கள் பலனளிக்கவில்லையா?
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளத்தை மேம்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் அதிக ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார். இதனால், நான்காயிம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போதும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால், மொத்த வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு இன்னும் பின்தங்கியே இருப்பது தமிழக தொழ்ல்துறை வளர்ச்சியை பற்றி கேள்வி எழுப்பியுள்ளது.