Reliance Power Share: மூன்று நாட்களில் 26% உயர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு!
Reliance Power Share Price:ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% உயர்ந்துள்ளது.
Reliance Power share price: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திலுள்ள ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 26% பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்கிழமையன்று அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 7 சதவீதம் உயர்ந்து ரூ. 27.99 என்ற அளவில் துவங்கியது. மேலும் மதியம் 1 மணியளவில் அது அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் பவர் ஸ்டாக் 9.97 சதவீதம் உயர்ந்து ரூ.28.68 என்ற அளவில் முடிவடைந்தது. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த வர்த்தக செசனில் அதன் பங்கு மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.ஐந்து நாட்களில் அதன் விலை 22 சதவீதத்திற்கு அதிகமாக இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் பவர் (Reliance Power ) பங்குகளின் மதிப்பு உயர்வுக்கு காரணம் அந்நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகிவிட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டது. ரூ.800 கோடி மதிப்பிலான கடன் திருப்பி செலுத்தப்பட்டதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டதும். முதலீட்டாளர்கள் அதன் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர்.
ரிலையன்ஸ் பவர் (ரிலையன்ஸ் பவர் ஷேர் ஜூம்ஸ்) பங்குகள் உயர்வால் அனில் அம்பானி நிறுவனத்தின் சந்தை மூலதனமும் அதிகரித்து ரூ.11520 கோடியாக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.34.45 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.13.80 ஆகவும் ஏற்ற, இறக்கத்தை பதிவு செய்துள்ளது.
பங்கு மதிப்பு 26% உயர்வு:
கடந்த மூன்று நாட்களில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் 26% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தில் இந்நிறுவனத்தின் பங்கு விலை ரூ.31.53 ஆக இருந்தது. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் 26.12 சதவீதம் உயர்ந்துள்ளது. பி.எஸ்.இ.ல் லாபத்துடன் வர்த்தகத்தில் இருந்தது. மிட் கேப்பில் இதம் நிகர லாபம் ரூ.12,665.51 கோடியாக இருந்தது.
BSE-யில் இன்று வர்த்த நேரம் தொடங்கியதில் இருந்தே ரிலையன்ஸ் பவர் பங்குகள் ரூ.1.5 கோடி மதிப்பு கொண்ட பங்குகள் முதலீட்டாளர்களிடம் கை மாறி கொண்டேயிருந்தது. இதன் மூலம் ரூ.46.41 கோடி தொகை நிகர லாபம் கிடைத்துள்ளது. இது தொடர்பான நிபுணர்கள் கூறுகையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.25-ரூ.32 வரையில் இந்த மாதம் முழுவதும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
கோல் இந்தியா, பி.பி.சி.எல். ஹெச்.சி.எல். டெக், பவர்கிரிட் கார்ப், ஸ்ரீராம் ஃபினான்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், ஓன்.என்.ஜி.சி. ஹெச்.டி.எஃப்.டி வங்கி, டெக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல், டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், லார்சன், விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ. சிப்ளா, ஆக்ஸிஸ் வங்கி,இந்தஸ்லேண்ட் வங்கி, ஹிண்டால்கோ, டி.சி.எஸ்.ம் அல்ட்ராடெக் சிமெண்ட்,கோடாக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோம் அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப்,, சன் பார்மா, இன்ஃபோசிஸ்,க்ரேசியம், மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.