மேலும் அறிய

Gold-Silver Price, 02 October: வாரத்தின் கடைசி நாளில் அதிகரித்த தங்கம் விலை!

வெள்ளி விலை கிராமிற்கு 90 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.60க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 64 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 368க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 34 ஆயிரத்து 944க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான  இன்று தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்துள்ளது. கிராமிற்கு தங்கம் ரூ.15 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 387க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.152 அதிகரித்து ரூபாய் 35 ஆயிரத்து 096க்கு விற்கப்படுகிறது.

சவரன் தங்கம் மீண்டும் 35 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 751க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 8க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு 90 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.60க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 64 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது.

முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.


Gold-Silver Price, 02 October: வாரத்தின் கடைசி நாளில் அதிகரித்த தங்கம் விலை!

மேலும், கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் இருந்த நிலையில், மூன்றாவது அலை சில நாடுகளில் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
Embed widget