மேலும் அறிய

Akshaya Tritiya 2021: அட்சய திருதியை நாளில் குறைந்தது தங்கம் விலை

அட்சய திருதியை நாளான இன்று அதிகாலை  5.44 முதல் இரவு 12.05 வரை தங்கம் வாங்கலாம். இந்த நேரம் தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாகப் பார்க்கப்படுகிறது. முழு ஊரடங்கில் கடைகள் மூடியிருப்பதால், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் தங்கங்களை வாங்குகின்றனர்.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.4,492க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,936க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,851க்கும், சவரன் ரூ.38,808க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அட்சைய திருதியை நாளான இன்று அதிகாலை  5.44 முதல் இரவு 12.05 வரை தங்கம் வாங்கலாம். இந்த நேரம் தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாகப் பார்க்கப்படுகிறது. முழு ஊரடங்கில் கடைகள் மூடியிருப்பதால், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் தங்கங்களை வாங்குகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கடைகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி  ரூ.75,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

நேற்றைய தங்கம், வெள்ளி விலை


 22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4496, சவரன் - ரூ.35,968


24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4855, சவரன் - ரூ.38,840


 ஒரு கிராம் வெள்ளி - ரூ.75.90


ஒரு கிலோ வெள்ளி - ரூ.75,900 

 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் மூதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார். மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும். ஏனென்றால்,  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.


மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார்.

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Embed widget