மேலும் அறிய

Gold Silver Price Today: தங்கம் விலை குறைந்தது... இல்லை இல்லை... லைட்டா நகர்ந்தது!

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து  ரூபாய் 36 ஆயிரத்து 120க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் கிராமிற்கு  ரூபாய்  4 ஆயிரத்து 520க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ரூபாய் 36 ஆயிரத்து 160க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நேரநிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 குறைந்து 4 ஆயிரத்து 515 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து 36 ஆயிரத்து 120-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, 24 கேரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 குறைந்து  4 ஆயிரத்து 865க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூபாய் 40 குறைந்து 38 ஆயிரத்து 920க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.10 குறைந்து ரூ.74.10க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74 ஆயிரத்து 100க்கு விற்கப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வு ஏன்?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ABP நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.


Gold Silver Price Today: தங்கம் விலை குறைந்தது... இல்லை இல்லை... லைட்டா நகர்ந்தது!

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள்.

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார். தமிழக அரசின் புதிய தளர்வுகள் படி, தமிழ்நாடு முழுவதும் நகைக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Embed widget