மேலும் அறிய

Gold Silver Price Today: அடடா அடடா.. எனை ஏதோ செய்கிறாய்.... குறைந்தது தங்கம் விலை!

24 கேரட் தங்கம் கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 864க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 912க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 கேரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 523க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 23 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் நேற்று சவரன் தங்கம் ரூபாய் ரூபாய் 36 ஆயிரத்து 184க்கு விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இன்று சவரன் தங்கம் ரூபாய் 184 குறைந்து ரூபாய் 36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 864க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 912க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 71.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 71 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.


Gold Silver Price Today: அடடா அடடா.. எனை ஏதோ செய்கிறாய்.... குறைந்தது தங்கம் விலை!

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
TASMAC bars : தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
Embed widget