மேலும் அறிய

Gold Rate Reduced: ஆண்டவா.. இது இப்படியே கன்ட்டினியூ ஆகணும்பா.! கணிசமாக குறைந்த தங்கம் - எவ்வளவு தெரியுமா.?

அசுர வேகத்தில் உயர்ந்து ஒரு லட்சம் ரூபாயை நோக்கி சென்றுகொண்டிருந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சமீபமாக தாறுமாறாக உயர்ந்து வந்ததால், விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அதிலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை என விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. இன்றைய விலை என்ன.? பார்க்கலாம்.

தாறுமாறாக உயர்ந்துவந்த தங்கம் விலை

சமீபத்தில், பல நாட்கள் இரண்டு முறை என்ற கணக்கில் அசுர வேகத்தில் ஏறிவந்தது தங்கத்தின் விலை. இந்த வாரத்தின் தொடக்க நாளான 6-ம் தேதி, அதிரடியாக விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து, சவரன் 89 ஆயிரத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும், ஒரு சவரன் சரியாக 89,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்திற்கு சென்ற தங்கம், ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 8-ம் தேதி மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 90,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொர்ந்து அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து சவரன் 91 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 11,385 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,080 ரூபாய்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், 9-ம் தேதியான நேற்று மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை. அதன்படி, ஒரு கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து கிராம் 11,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்று கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை

இப்படிப்பட்ட சூழலில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 165 குறைந்து ஒரு கிராம் 11,260 ரூபாய்க்கும், ஒரு சவரன் 90,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதிரடி காட்டும் வெள்ளி விலை

தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்த நிலையில், வெள்ளி விலை கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. 

கடந்த 6-ம் தேதி 2 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 167 ரூபாயை எட்டியது வெள்ளி. அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி அதே விலையில் நீடித்த வெள்ளி, 8-ம் தேதி ஒரு கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, புதிய உச்சமாக கிராம் 170 ரூபாய்க்கு சென்றது.

இந்நிலையில், 9-ம் தேதியான நேற்று மீண்டும் விலை உயர்ந்த வெள்ளி, ஒரு கிராம் 177 ரூபாயாக மற்றொரு புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 77 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது.

இந்த சூழலில், இன்றும் விலை உயர்ந்துள்ள வெள்ளி, ஒரு கிராம் 180 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget