மேலும் அறிய

Gold Rate 11th Oct.: இது உனக்கே நல்லா இருக்கா.?! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்வு

தொடர்ந்து குறையுமா என்று எண்ணியிருந்த மக்களை ஏமாற்றி, இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது தங்கம். அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்றைய விலை நிலவரங்களை பார்க்கலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையோ தொடர்ந்து உயர்ந்து, இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரங்களை தற்போது பார்க்கலாம்.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், நேற்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கணிசமாக குறைந்தது. இப்படியே தொடர்ந்து விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அதை பொய்யாக்கி இன்று சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான 6-ம் தேதி, அதிரடியாக விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது தங்கம். அதன்படி, ஒரு கிராம் 11,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து, சவரன் 89 ஆயிரத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும், ஒரு சவரன் சரியாக 89,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்திற்கு சென்ற தங்கம், ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 8-ம் தேதி மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 90,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

தொர்ந்து அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து சவரன் 91 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 11,385 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,080 ரூபாய்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், 9-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை. அதன்படி, ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

இப்படிப்பட்ட சூழலில், 10-ம் தேதியான நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 165 குறைந்து ஒரு கிராம் 11,260 ரூபாய்க்கும், ஒரு சவரன் 90,080 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனாலும், மாலையில் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,340 ரூபாய்க்கும், ஒரு சவரன் 90,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி கிராமிற்கு 85 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 91,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தாறுமாறாக உயர்ந்துவரும் வெள்ளியின் விலை

தங்கத்தோடு போட்டி போட்டு உயர்ந்துவரும் வெள்ளியின் விலை கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 

கடந்த 6-ம் தேதி 2 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 167 ரூபாயை எட்டியது வெள்ளி. அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி அதே விலையில் நீடித்த வெள்ளி, 8-ம் தேதி ஒரு கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, புதிய உச்சமாக கிராம் 170 ரூபாய்க்கு சென்றது.

இந்நிலையில், 9-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்த வெள்ளி, ஒரு கிராம் 177 ரூபாயாக மற்றொரு புதிய உச்சத்தை அடைந்தது.  இந்த சூழலில், 10-ம் தேதியான நேற்று மீண்டும் விலை உயர்ந்த வெள்ளி, ஒரு கிராம் 180 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையானது.

இந்நிலையில், நேற்று மாலையில் மீண்டும் அதிரடியாக கிராமிற்கு 4 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 184 ரூபாய் என்ற புதிய உச்சத்திற்கு சென்றது. இச்சூழலில், இன்று மீண்டும் 3 ரூபாய் விலை உயர்வை சந்தித்து, கிராம் 187 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலைக்கு சென்றுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.

தங்கத்துடன் போட்டி போட்டி வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
America Vs Canada: கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
TN Weather Report: 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
Pete Hegseth: பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
Embed widget