மேலும் அறிய

Gold Rate 9th October: இன்னைக்குமா சாமி.! உனக்கு முடிவுகட்ட ஆள் இல்லையா.? மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; இன்று எவ்வளவு?

தங்கம் விலை போகும் போக்கை பார்த்தால், விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் போலிருக்கிறது. இந்நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்து, ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கு சென்றுவிட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொட்டு, தங்கம் வாங்குவோரின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. இந்த சூழலில், இன்று சவரனுக்கு மேலும் 120 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு சவரன் 91 ஆயிரத்து 200 ரூபாயை தொட்டுள்ளது.

தினம்தோறும் உச்சங்களை எட்டும் தங்கம் விலை

தொடர் உயர்வை சந்தித்து புதிய உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை, கடந்த அக்டோபர் 1-ம் தேதி, கிராம் 10,950 ரூபாயாகவும், சவரன் 87,600 ரூபாயாகவும் இருந்தது. 2-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.

இந்நிலையில், 3-ம் தேதி விலை சற்று குறைந்து, ஒரு கிராம் 10,900 ரூபாயாகவும், ஒரு சவரன் 87,200 ரூபாயாகவும் விற்பனையானது. 4-ம் தேதி சற்று விலை உயர்ந்து ஒரு கிராம் மீண்டும் 10,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் சென்றது.

தொடர்ந்து 5-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 6-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து, சவரன் 89 ஆயிரத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும், ஒரு சவரன் சரியாக 89,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்திற்கு சென்ற தங்கம், ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயை கடந்தது.

அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 90,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து சவரன் 91 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 11,385 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,080 ரூபாய்கும் விற்கப்பட்டது.

இன்றைய விலை நிலவரம் என்ன.?

இந்நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது தங்கம் விலை. அதன்படி, ஒரு கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து கிராம் 11,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்

தங்கத்துடன் போட்டி போட்டி வெள்ளி விலையும் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது.

கடந்த 1-ம் தேதி கிராம் 161 ரூபாயாக இருந்த வெள்ளி, 2-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து 164 ரூபாயை எட்டியது. 3-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் விலை குறைந்து, கிராம் 162 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், 4-ம் தேதி மீண்டும் அதிரடியாக கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 165 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து 5-ம் தேதி அதே விலையில் நீடித்தது.

இந்நிலையில், 6-ம் தேதி மீண்டும் 2 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 167 ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி அதே விலையில் நீடித்த வெள்ளி, நேற்று ஒரு கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, புதிய உச்சமாக கிராம் 170 ரூபாய்க்கு சென்றது.

இந்நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்த வெள்ளி, ஒரு கிராம் 171 ரூபாயாக மற்றொரு புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, 91 ஆயிரம் ரூபாயை கடந்துள்ள நிலையில், விரைவிலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் போல் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget