மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! இன்று ஒரே நாளில் 5,000 அதிகரித்த வெள்ளி- நகைப்பிரியர்களுக்கு ஷாக்

Gold Rate Today: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், 2 நாட்களில் 6,240 ரூபாய் சவரனுக்கு குறைந்தது. திடீரென நேற்று மதியம் மீண்டும் அதிகரித்த தங்கம் விலை, இன்று காலை மீண்டும் அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக எதிர்கால சேமிப்பாகவும், புத்தாண்டு, தீபாவளி, பிறந்தாள் உள்ளிட்ட விஷேசங்களுக்கு பரிசளிக்கவும் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள். அதிலும் நடுத்தர வர்க்க மக்கள் தங்களது பெண் குழந்தைகளில் திருமணத்திற்காகவும் வாங்குகிறார்கள். மேலும்  மருத்து செலவு உள்ளிட்ட அவரச தேவைக்கு தங்க நகைகளை உடனடியாக அடகு வைக்கவும், விற்பனை செய்யவும் நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் பெரிய அளவில் உதவியாக உள்ளது. எனவே தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே நடுத்தர வர்க்க மக்களுக்கு இருந்து வந்தது. இதன் காரணமாகவே நடுத்தர வர்க்க மக்கள் சிறிது சிறிதாக தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

 நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி

 மாத ஊதியத்தில் நகை சீட்டு போட்டு வாங்கு மக்களுக்கு தற்போது தங்கத்தின் விலையானது பல மடங்கு உயர்ந்திருப்பது அதிர்ச்சியை கொடுதுள்ளது. 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சவரன் வாங்கலாம் என திட்டமிட்டு சீட் போட்டவர்கள், தற்போது ஒரு சவரன் ஒரு லட்சத்து 30ஆயிரத்தை கடந்துள்ளதால் ஷாக்கில் உள்ளனர். இதனால் தங்க நகைகளை வாங்கும் திட்டத்தையே மறந்துள்ளனர். அந்த வகையில் தான் கடந்த ஆண்டு இதே நேரம் ஒரு சவரன் 65ஆயிரம் என விற்பனைலசெய்யப்பட்டது.

தற்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு வாங்குகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஒரு காரணமாகவும், ஈரான் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக  பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த 10 நாட்களில் வராலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சரசரவென 22ஆயிரம் ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் தினந்தோறும் ஏறி இறங்கி வரும் தங்கத்தின் விலையால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

  • ஜனவரி- 3ஆம் தேதி-  தங்கம் சவரனுக்கு 2,560 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை
  • ஜனவரி 4ஆம் தேதி - தங்கம் சவரனுக்கு 5,040 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்  1,19,200 ரூபாய்க்கு விற்பனையானது.
  • ஜனவரி 5ஆம் தேதி- ஒரு சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து 1,14,560 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது.
  • ஜனவரி 6ஆம் தேதி- சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து 1,12,960 ரூபாய்க்கு விற்பனை. அதே நேரம் பிற்பகல் தங்கத்தின் விலை அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு 130 ரூபாயும், சவரனுக்கு 1040 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் உயர்ந்து  14,420 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் அதிகரித்து 285 ரூபாய்க்கும், கிலோ வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாயும் உயர்ந்து 2 லட்சத்து 85ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget