Cooking Cylinder Subsidy : சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 200 மானியம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ள நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
9/12 Also, this year, we will give a subsidy of ₹ 200 per gas cylinder (upto 12 cylinders) to over 9 crore beneficiaries of Pradhan Mantri Ujjwala Yojana. This will help our mothers and sisters. This will have a revenue implication of around ₹ 6100 crore a year. #Ujjwala
— Nirmala Sitharaman (@nsitharaman) May 21, 2022
இதன்மூலம் நாடு முழுவதும், 9 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், விரைவில் சிமெண்ட் விலை குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்