Budget 2023: பெண்களே உங்களுக்காக! அதிரடி சேமிப்பு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்.. என்ன திட்டம்? முழு விவரம்..
பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் : 7.5% வட்டி விகிதத்தில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டத்தினை பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் : 7.5% வட்டி விகிதத்தில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டத்தினை பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி) 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய நாட்டின் பெண்கள் சார்ந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தில் பெண்களுக்கு 'மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டட்தின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான டெபாசிட் வசதி 7.5 சதவீத வட்டியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (AIDWA) பகுப்பாய்வின்படி, பாலின பட்ஜெட் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டின் GDP யில் 0.71% இலிருந்து 0.66% ஆகக் குறைந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான பட்ஜெட் செலவினத்தின் ஒரு பகுதியாக 0.57% லிருந்து 0.51% ஆக குறைந்துள்ளது, அமைச்சகம் ₹20,263.07 கோடி பெறுகிறது.