40% சிறு தொழில்கள் வெளியேறும் அபாயம்... பட்ஜெட்டில் இதை செய்தால் போதும்.. தொழில் முனைவோர் சங்க தலைவர் பேட்டி!
கூட்டத்தொடரின் முதல் அமர்வு வருகின்ற 31ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மத்திய பட்ஜெட்டின் சிறு, குறு தொழிற்துறையின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ரகுநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2023 ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று 31ம் தேதி கூடுகிறது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி அன்றைய தினத்தின் இரு அவைகளிலும் கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1 ம் தேதி 2023 - 24 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு வருகின்ற 31ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்:
இந்தியாவில் விவசாயம், ஜவுளி துறைக்கு அடுத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன.
மத்திய பட்ஜெட்டின் சிறு, குறு தொழிற்துறையின் எதிர்பார்ப்பு என்பது குறித்து தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ரகுநாதன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் அடிக்கடி நிறைய ஸ்ட்ரைக்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இது எதன் காரணமாக என்று கேட்டால், அது பணம் சம்பந்த பட்டது, முதலீடு சம்பந்த பட்டது, கடன் சம்பந்த பட்டது, கடனை திருப்பி தர முடியாத சூழல் ஏற்படும் நிலை சம்பந்த பட்டது.
இரண்டாவது மூலப்பொருள்களின் விலையேற்றம் கட்டுகடங்காமல் போய் கொண்டிருப்பதனால், லாபத்தை ஈட்ட முடியாத சூழ்நிலைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் தள்ளப்படுகிறார்கள்.
மூன்றாவதாக கல்வி அறிவுமிக்க, செயல்திறன் மிக்க வேலையாட்கள் கிடைப்பதில்லை, சிரமமாக உள்ளது. அதனால்தான் வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து வேலை செய்வதை பார்ப்பீர்கள். தொடர்ந்து இந்தநிலை நீடிக்குமா என்று கேட்டால் தெரியாது. அந்தந்த மாநிலங்களில் அவர்களுக்கு வாய்ப்பு வரும்போது எல்லா இடங்களில் அவர்களால் நகர முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால், இது ஒரு இண்டஸ்ரியை முடக்கிவிடும். அப்போ, இந்த மூன்றுக்கு உண்டான தீர்வு இந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டும்.
இந்தமுறை பட்ஜெட்டில் இதற்கு தீவிரமாக தீர்வு காணப்படாவிட்டால் இவர்கள் நலிந்துவிட கூடிய அபாயம் ஏற்படும். வேலையிழப்பு, வேலையின்மை, வேலை குறைப்பு அதிகமாகிவிட கூடிய சூழல் ஏற்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நலிவடைந்துள்ள 40% சிறு தொழில்கள் தொழிலில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தொழில்களை மூடுவதற்கான வழிமுறைகளை அரசு எளிமை படுத்த வேண்டும் என்று முன்வைக்கப்படுகிறது.
உதாரணமாக, கேபிட்டல் டேக்ஸில் இருந்து விலகு அளிக்கலாம், அதிக லாபத்தை ஈட்ட கூடிய தொழிலில் இருப்பவர்கள், உங்களது லாபத்தை திரும்பவும் தொழிலில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், ஜிஎஸ்டி மற்றும் இன்கம் டேக்ஸில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்கலாம்” என்றும் தெரிவித்தார்.