Budget 2025 LIVE: தொடங்கியது பட்ஜெட்! மக்களுக்கான சலுகைகள் என்னென்ன? இதோ நேரலையில்!
Budget 2025 LIVE Tamil: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முழுமையாக கீழே காணலாம்.

மத்திய அரசு இன்று 2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மத்திய நிதிநிலை அறிக்கைக்கான முழு அறிவிப்பையும் உடனுக்குடன் ஏபிபி நாடு - யூ டியூபில் காணலாம்.
மத்திய பட்ஜெட் 2025 நேரலை | Budget 2025 LIVE in Tamil:
வருமான வரி
இந்த நிதிநிலை அறிக்கையில் தங்கம், மின்னனு உற்பத்தி உள்ளிட்டவற்றிற்கான வரிகளில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் மக்கள் பெரும் ஆவலுடன் இருப்பது தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பதே ஆகும். அதில் மாற்றம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், உச்சத்திற்கு சென்றுள்ள தங்கத்தின் விலையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர தங்கம் மீதான வரியில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.





















