மேலும் அறிய

2,000 அறுவைசிகிச்சை - தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலும்பியல் ரோபோடிக் திட்டம் - அப்போலோ மருத்துவமனை சாதனை

Apollo Robotic Surgey: சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது.

Apollo Robotic Surgey: அப்போலோவின் அறுவை சிகிச்சை முறை தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலும்பியல் ரோபோடிக் திட்டமாக உருவெடுத்துள்ளது!

ரோபோடிக் எலும்பியல் அறுவை சிகிச்சையில் சாதனை:

சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள், மற்றும் முழுமையான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான (Robotic-assisted) எலும்பியல் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த மைல்கல், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மாற்று சிகிச்சையில் மருத்துவமனையின் பயணத்தில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதுடன், நவீன அறுவைசிகிச்சை அமைப்புகளை மருத்துவ நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைப்பதில் அதன் வளர்ந்து வரும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது.

மருத்துவரின் டச்சில் ரோபோடிக் சிகிச்சை

ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகளைத் துல்லியமாகச் செய்ய, ஸ்ட்ரைக்கரின் Mako SmartRobotics தொழில்நுட்பம், 3D CT ஸ்கேன் இமேஜிங் மற்றும் அறுவைசிகிச்சைக்கு முந்தைய விரிவான திட்டமிடல் ஆகியவற்றை இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கிறது. இந்த தொழில்நுட்பம் நோயாளியின் உடல் அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை மருத்துவர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப அறுவைசிகிச்சையைத் திட்டமிட்டுச் செய்ய முடிகிறது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டத்தை செயல்படுத்துவதில் ரோபோடிக் கை உதவினாலும், சிகிச்சை முடிவுகளும் அறுவை சிகிச்சை தொடர்பான தீர்மானங்களும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடமே இருக்கும்.

ரோபோடிக் சிகிச்சையின் பலன்கள்:

முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு, ரோபோ உதவியைப் பயன்படுத்துவது மிகக்குறைந்த அளவு கீறல்களைக் கொண்ட அறுவை சிகிச்சை முறைக்கு உதவுவதோடு, ஒட்டுமொத்தமாக சிறந்த சீரமைப்பு மற்றும் துல்லியம், விரைவாக குணமடைதல் மற்றும் பொருத்தப்படும் சாதனங்களின் மேம்பட்ட ஆயுட்காலம் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறவும் பங்களிக்கும். அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு, குறிப்பாக சிக்கலான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளைக் கையாளும் போது, உடற்கூறியலை மதிப்பிடவும் எலும்பைக் தயார்படுத்துவதைத் திட்டமிடவும் மற்றும் அறுவை சிகிச்சையின் போது சீரான தன்மையைப் பராமரிக்கவும் இந்தத் தொழில்நுட்பம் கூடுதல் கருவிகளை வழங்குகிறது.

சாதனை குறித்து மருத்துவர்கள் பெருமிதம்

இந்தச் சாதனையின் ஒரு பகுதியாக, முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர்களான டாக்டர் அருண் கண்ணன், டாக்டர் கோர்னாட் கோசிகன், டாக்டர் குணால் பட்டேல், டாக்டர் நாவலடி சங்கர், டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி மற்றும் டாக்டர் மதன் திருவேங்கடம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரோபோடிக் உதவியுடனான மூட்டு மாற்று அறுவைசிகிச்சையின் பரிணாம வளர்ச்சி மற்றும் மிகவும் துல்லியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை வழங்குவதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து அவர்கள் விளக்கினர்.

அப்போலோ மருத்துவமனையின் (கிரீம்ஸ் சாலை) முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் கண்ணன் தனது சிறப்புரையில் கூறியதாவது:"2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்திருப்பது எங்கள் குழுவிற்கு ஒரு பெரிய மைல்கல்லாகும். ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சையில் பல ஆண்டுகளாக நாங்கள் பெற்றுள்ள அனுபவத்தை இது காட்டுகிறது. சிக்கலான பல சிகிச்சைகள் உட்பட, நாங்கள் செய்துள்ள பல்வேறு வகையான மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் இந்தச் சாதனையை மிகவும் சிறப்பானதாக ஆக்குகின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் ரோபோடிக் உதவியை எந்த அளவுக்கு, எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் எங்களுக்கு உதவியுள்ளது. இனி வருங்காலங்களில் இந்த நிபுணத்துவத்தை மென்மேலு வளர்த்து, எலும்பியல் சிகிச்சையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவோம். நோயாளிகளுக்குப் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் சிறந்த சிகிச்சையை வழங்குவதில் எங்கள் கவனம் தொடரும்."

இந்நிகழ்ச்சியில் பேசிய அப்போலோ மருத்துவமனைகளின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி கூறியதாவது: "மருத்துவ சிகிச்சைகளில் தொழில்நுட்பத்தின் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைக் கொண்டு வருவதில் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான கவனத்தை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் சிறப்பான பராமரிப்புச் சூழல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதே எங்கள் அணுகுமுறையின் பலமாகும். எங்கள் திறன்களை நாங்கள் விரிவுபடுத்தும் அதே வேளையில், நோயாளிகளின் பராமரிப்பிற்கு மதிப்பு சேரககும் மற்றும் சிறந்த அறுவைசிகிச்சை முடிவுகளை வழங்குவதில் எங்கள் மருத்துவர்களுக்கு ஆதரவளிக்கும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதில் எங்கள் கவனம் தொடர்ந்து இருக்கும்" என்றார்.

நான்கு தசாப்த பாரம்பரியம்..!

இந்தச் சாதனை, பல்வேறு மருத்துவத் துறைகளில் ரோபோடிக் உதவியுடன் அறுவைசிகிச்சை செய்வதில் அப்போலோ மருத்துவமனை பெற்றுள்ள பரந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகும். பிப்ரவரி 2026-ல், அப்போலோ மருத்துவமனை 8,000 ரோபோடிக் அறுவைசிகிச்சைகளைக் கடந்ததாக அறிவித்தது. இது மேம்பட்ட அறுவைசிகிச்சைத் திறன்களில் அப்போலோவின் நீண்டகால முதலீட்டை எடுத்துக்காட்டுகிறது. கிரீம்ஸ் சாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் எலும்பியல் சிகிச்சைகள், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மற்றும் இடுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் அப்போலோவின் நிபுணத்துவத்தை மேலும் வலுவாக்குகின்றன.

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி 1983 ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி முதல் மருத்துவமனையைத் தொடங்கிய போது, அப்போலோ சுகாதாரத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, 78 மருத்துவமனைகள், 10,900-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 7,200+ மருந்தகங்கள், 300+ கிளினிக்குகள் மற்றும் 2,500 நோயறிதல் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவையாக அப்போலோ விளங்குகிறது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவைசிகிச்சைகளைச் செய்துள்ள இது, உலகின் முன்னணி இருதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். நோயாளிகளுக்கு உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்களும் நோயாளிகளுக்குச் சிறப்பான அக்கறையுடன் சிகிச்சை அளித்து, இந்த உலகத்தை ஆரோக்கியமானதாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு: www.apollohospitals.com

ஊடகத் தொடர்புக்கு: அப்போலோ மருத்துவமனைகள்: Ms. சுகந்தி @ 98417 14433

பர்சன் இந்தியா: Ms. ஹரிப்ரியா @ 97907 50667

பொறுப்புத் துறப்பு: இது ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்டுரை. ABP நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் மற்றும்/அல்லது ABP லைவ் இந்த கட்டுரையின் உள்ளடக்கங்கள் மற்றும்/அல்லது இங்கு வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளை எந்த வகையிலும் ஆதரிக்கவோ/சந்தா எடுக்கவோ இல்லை. வாசகர் விருப்பப்படி முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio IPO: இந்திய சந்தையில் புது வரலாறு..! ஜியோ ப்ளாட்ஃபார்ம் IPO பங்குகள் - ரூ.7.4 லட்சம் கோடிக்கு ஏலம்
இந்திய சந்தையில் புது வரலாறு..! ஜியோ ப்ளாட்ஃபார்ம் IPO பங்குகள் - ரூ.7.4 லட்சம் கோடிக்கு ஏலம்
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Embed widget