LPG Cylinder Price: ஷாக் கொடுத்த ரயில் டிக்கெட் விலை ஏற்றம், ஆப்படித்த சிலிண்டர் விலை? என்னயா இப்படி பண்றீங்க?
LPG Cylinder Price: ரயில் டிக்கெட் விலை ஏற்றத்திற்கு மத்தியில் வணிக சிலிண்டரின் விலை குறைந்து இருப்பது, வணிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LPG Cylinder Price: ரயில் டிக்கெட் விலை ஏற்றத்திற்கு மத்தியில் வணிக சிலிண்டரின் விலை குறைந்து இருப்பது, வணிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் விலை குறைவு:
எரிபொருள் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, ஜுன் மாதம் ஒன்றாம் தேதியான இன்று, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 57 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 823 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த வணிக சிலிண்டரின் விலை ஆயிரத்து 881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்தவித மாற்றமும் இன்றி, தொடர்ந்து 868 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மாற்றம் காணாத வீட்டு உபயோக சிலிண்டர் விலை:
முன்னதாக கடந்த 2024 மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதனால், சிலிண்டர் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்தது. அதன் பிறகு வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 என்ற விலையில், கடந்த மூன்று மாதங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஷாக் அடிக்கும் ரயில் டிக்கெட் விலை:
இதனிடையே, நாட்டின் நடுத்தர மக்களின் பிரதான நெடுந்தூர போக்குவரத்து வசதியான, ரயிலில் டிக்கெட் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண 2ம் வகுப்புக்கு முதல் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டண உயர்வு இல்லை. 501 முதல் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிக்கெட் கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 501 முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 501 முதல் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கான ரயில் கட்டணம் 15 ரூபாயாகவும், சாதாரண முதல் வகுப்பு ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ.0.5 காசு உயர்ந்துள்ளது.
2ம் வகுப்பு ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், படுக்கை வசதி கொண்ட ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருக்கை வசதி கொண்ட ஏசி, ஏசி 3 டயர், 2 டயர், ஏசி முதல் வகுப்பு ரயிலுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், புறநகர் ரயில்கள், ரயில்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை.





















