மேலும் அறிய

Adhani Share: மீண்டுமா...அதானி குழுமத்தின் பங்குகள் திடீர் சரிவு... ஒரே நாளில் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு...என்ன காரணம்...?

அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 10 சதவீதம் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-

Adhani Share: அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 10 சதவீதம் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை

அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்தது.

ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி குழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்தனர்.  ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையீட்டு இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தது. 

திடீர் சரிவு

அதனால் அதானி குழுமத்தின் பங்குகள் சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்தன. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் திடீரென அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.  மொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இன்று மட்டும் 10 சதவீதம் குறைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே நாளில் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

காலை 11.11 மணியளவில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 8.92 சதவீதம் குறைந்து ரூ.2,182.10-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதானி போர்ட்ஸ் 4.8 சதவீதம் சரிந்து ரூ.709.75 ஆக இருந்தது. அதானி பவர் 5.12 சதவீதம் சரிந்து ரூ.243.65 ஆக இருந்தது. அதானி டிரான்ஸ்மிஷன் 6.88 சதவீதம் குறைந்து ரூ.749.50 ஆக இருந்தது. அதானி க்ரீன் எனர்ஜி 2.6 சதவீதம் குறைந்து ரூ.948.75க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதானி வில்மர் 2.98 சதவீதம் சரிந்து ரூ.405.90 ஆக இருந்தது. இதன் மூலம் அதானி குழுமத்திற்கு ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகல் முதலீட்டளார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

என்ன காரணம்?

இன்று அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் சில அரசு அமைப்புகள் துவங்கியுள்ள விசாரணையின் மூலம் அதானி பங்குகள் இன்று பெரிய அளவில் சரிந்துள்ளதாக தெரிகிறது. அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சரிந்த பங்குகள் மதிப்பு எப்படி உடனேயே உயரும் என்று சந்தேகத்தின் பேரில் சில அமைப்புகள் விசாரணைகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது.  ஆனால் இந்த விசாரணை குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

ஆதனின் பொம்மை நாவலை எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய பாலபுரஸ்கார் விருது அறிவிப்பு...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget