மேலும் அறிய

Stock Market : ஒன்பதே மாதங்களில்.. பங்குச் சந்தையில் இருந்து வெளியேறிய 53 லட்சம் பேர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்.. காரணம் என்ன?

பங்கு சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்கு சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம்:

அந்த விதத்தில், பங்கு சந்தையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் தற்போது மெல்ல மெல்ல தெரிய வருகிறது. பங்கு சந்தையில் மின்னணு வடிவத்தில் பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய டிமேட் கணக்குகளே அதிகம் பயன்படுகிறது. எனவே, பங்கு சந்தை தரகர்கள் ஒவ்வொரு மாதமும் புதிய டிமேட் கணக்குகளைத் திறந்து வருகின்றனர். 

ஆனால், அதே நேரத்தில், பங்கு சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்கு சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்கு சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது.

இதை தவிர்த்து, பங்கு சந்தையில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு மூன்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், பங்கு சந்தையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், தற்போது, பங்கு சந்தையில் மக்கள் வர்த்தகம் செய்வது ஒப்பிட்டளவில் குறைந்துள்ளது.

அறிகுறிகள்:

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டில், சில்லறை விற்பனை 49,200 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2021-22 நிதியாண்டில், சில்லறை விற்பனை 1.65 லட்சம் கோடி ரூபாயாகவும் 2020-21 நிதியாண்டில் 68,400 கோடி ரூபாயாகவும் இருந்தது.

மார்ச் 2023இல் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் தினசரி சராசரி வருவாய் 29% குறைந்து ரூ.23,700 கோடியாக பதிவானது.

கடைசியாக, புதிய டிமேட் கணக்குகள் பதிவு செய்யப்படும்  வேகம் குறைந்து வருகிறது. சேர்க்கப்பட்ட புதிய கணக்குகளின் எண்ணிக்கை, மாதந்தோறும் 8% குறைந்து 19 லட்சமாக உள்ளது.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம், கொரோனா பெருந்தொற்று என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரியும் முறை அதிகம் கடைபிடிக்கப்பட்டதால் இளைஞர்களுக்கு பங்கு சந்தை கவர்ச்சிகரமாக தென்பட்டதாகவும் ஆனால், தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு குறைந்து வருவதால் பங்கு சந்தை மீது இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India - USA: ”இந்தியா யானை மாதிரி, அமெரிக்கா ஒரு எலி” தனது காலையே சுட்டுக்கொள்வதாக ட்ரம்பிற்கு வார்னிங்
India - USA: ”இந்தியா யானை மாதிரி, அமெரிக்கா ஒரு எலி” தனது காலையே சுட்டுக்கொள்வதாக ட்ரம்பிற்கு வார்னிங்
Dowry Suicide: மீண்டுமா.. கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமை, கணவன் குடும்பத்தினர் அட்டூழியம்
Dowry Suicide: மீண்டுமா.. கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமை, கணவன் குடும்பத்தினர் அட்டூழியம்
RSS Chief on Retirement: “75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
“75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India - USA: ”இந்தியா யானை மாதிரி, அமெரிக்கா ஒரு எலி” தனது காலையே சுட்டுக்கொள்வதாக ட்ரம்பிற்கு வார்னிங்
India - USA: ”இந்தியா யானை மாதிரி, அமெரிக்கா ஒரு எலி” தனது காலையே சுட்டுக்கொள்வதாக ட்ரம்பிற்கு வார்னிங்
Dowry Suicide: மீண்டுமா.. கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமை, கணவன் குடும்பத்தினர் அட்டூழியம்
Dowry Suicide: மீண்டுமா.. கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமை, கணவன் குடும்பத்தினர் அட்டூழியம்
RSS Chief on Retirement: “75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
“75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
Bikes GST Hike: ப்ரீமியம் பைக் வாங்க பிளான் வச்சுருக்கீங்களா.? உடனே வாங்கிடுங்க - வரி 40% ஆகப் போகுது
ப்ரீமியம் பைக் வாங்க பிளான் வச்சுருக்கீங்களா.? உடனே வாங்கிடுங்க - வரி 40% ஆகப் போகுது
China Russia N.Korea: சீனா செல்லும் கிம் ஜாங் உன், புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி.?
சீனா செல்லும் கிம் ஜாங் உன், புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி.?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
Embed widget