மேலும் அறிய

Euro 2020 Final: வெற்றி.. தோல்வி... நிற வெறி தாக்குதல்.. கால்பந்து ஆட்டத்தின் எதிர்காலம் என்னவாகும்?

2021 ஜூலை 11 – பொதுவாக ஞாயிறுகளில் அலுவலக பணிகளுக்கு ஓய்வுவிட்டு, குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு அந்த நாள் ரிலாக்ஸாக இருப்பது அனைவரது வழக்கமாக இருக்கும். அந்த வகையில், நேற்று டபுள் டிலைட்! ஆர்ப்பாட்டம் இல்லாத ஞாயிற்றுக்கிழமையில், கூடவே இங்கிலாந்து – இத்தாலி அணிகள் மோதிய யூரோ கோப்பை இறுதிப்போட்டியை காணும் வாய்ப்பு. போட்டியை காண தயாராகினோம்.

1968-ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் யூரோ கோப்பை கால்பந்து தொடரை இத்தாலி கைப்பற்றியுள்ளது. கிட்டதட்ட 53 ஆண்டுகள் காத்திருந்து இத்தாலி யூரோ கோப்பையை வென்றுள்ளது. 2000ஆம் ஆண்டு மற்றும் 2012-ம் ஆண்டு இத்தாலி அணி யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றியது. 

இந்த போட்டி, இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாகத்தான் அமைந்தது. 1966-ம் ஆண்டிற்கு பிறகு முக்கியமான கோப்பைகளை இங்கிலாந்து கால்பந்து அணியில் வெல்ல முடியவில்லை.  இதனால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கால்பந்து ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்த இறுதிபோட்டியாக அமைந்தது.

Euro 2020 Final: வெற்றி.. தோல்வி... நிற வெறி தாக்குதல்.. கால்பந்து ஆட்டத்தின் எதிர்காலம் என்னவாகும்?

லாஸ் ஏஞ்சல்ஸில் உட்கார்ந்து கொண்டு, டென்ஷன் இல்லாமல் இந்த போட்டியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட எனக்கு, போட்டி தொடங்குவதற்கு முன்பே பிபி பிரஷர் ஆரம்பமாகிவிட்டது. காரணம், போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் கிரவுண்டுக்குள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். அசாதாரண சூழலில்தான் போட்டி தொடங்கியது. இந்த பரபரப்பு, 1-1 என போட்டி சமன் ஆனதில் இருந்து 4-3 என பெனால்டி சூட்-அவுட் முறையில் இத்தாலி கோப்பையை வென்றது வரை தொடர்ந்தது.

இந்த தொடரைப் பொருத்தவரை, இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாட தகுதி வாய்ந்ததா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. எனக்கும் இந்த கேள்வி எழுந்தது. டென்மார்க் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பினால், அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்துக்கு அளிக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் நான் உடன்படவில்லை, அது நடுவர்களின் தவறாகவே கருதுகின்றேன். 

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் பற்றிய வரலாற்றை படித்ததாலும், இந்த தலைப்பை பின்பற்றுவதாலும் எனக்கு இங்கிலாந்து மீது இருக்கும் கருத்து முரண்பாடாகவே இருந்துள்ளது. எனினும், இந்த போட்டியைப் பொருத்தவரை நான் இங்கிலாந்து ரசிகனோ இத்தாலி ரசிகனோ கிடையாது. ஆனால், இங்கிலாந்தில் அரங்கேறி கொண்டிருக்கும் பிரச்சனைகளை தெரிந்தவனாகவும், இங்கிலாந்து நடந்து கொள்ளும் விதத்தாலும் இது போன்ற ஒரு முக்கிய போட்டியில் யாரை ஆதரிக்கிரீர்களே என என்னை கேட்டால், நிச்சயம் இங்கிலாந்துக்கு எதிரான அணியைதான் நான் தேர்வு செய்வேன் என்பதில் சந்தேகமில்லை. 

Euro 2020 Final: வெற்றி.. தோல்வி... நிற வெறி தாக்குதல்.. கால்பந்து ஆட்டத்தின் எதிர்காலம் என்னவாகும்?

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷா,கோல் அடித்தார். உண்மையிலேயே, அசத்தலான கோல். ஆனால், என்னால் கொண்டாடவும் முடியவில்லை, பாராட்டாவும் இருக்க முடியவில்லை. இரண்டுக்கும் நடுவில் சிக்கி கொண்டேன். இந்த போட்டியை இங்கிலாந்து வென்றால், அதன் பிறகு நிகழ இருக்கும் சம்வங்களை எண்ணி வருந்தி கொண்டேன். 

போட்டியின் முதல் பாதியில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தினாலும், இரண்டாம் பாதியில் இத்தாலி அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 1-1 என போட்டி சமனான நிலையில், பெனால்டி சூட்-அவுட் வாய்ப்புகள் கொடுத்த போது ‘ஹார்ட்-அட்டாக்’ வராத குறையாக போட்டி விறுவிறுப்பாக சென்றது.  பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பின்போது, இத்தாலி அணியில் மூன்று வீரர்கள் கோல் அடித்தனர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் இருவரின் பெனால்டி ஷூட் அவுட்டை இத்தாலி கோல் கீப்பர் டோனருமா சிறப்பாக தடுத்தார். இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.

இங்கிலாந்து வீரர் சகா பெனால்டி வாய்ப்பை மிஸ் செய்தபோது, சமூக வலைதளத்தில் அவருக்கு எதிரான கருத்துகள் வரத்தொடங்கிவிட்டன. அவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர், ஆனால் இங்கிலாந்தில் வளர்ந்தவர். அவர் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், போட்டி முடிந்த சில மணி நேரங்களில் வன்மங்களும், நிறவெறி தாக்குதலும் அதிகரித்தன. 

Euro 2020 Final: வெற்றி.. தோல்வி... நிற வெறி தாக்குதல்.. கால்பந்து ஆட்டத்தின் எதிர்காலம் என்னவாகும்?

கால்பந்து ரசிகர்கள் சகாவை எதிர்த்து சமூக வலைதளத்தில் ஆட்டம் போட்டனர். இந்த கருத்துகளுக்கு, இங்கிலாந்து கால்பந்து அமைப்பு கண்டிப்பு தெரிவித்திருந்தாலும், கமெண்ட்களும், அட்டாக்கும் நின்றபாடில்லை.  நேற்றைய போட்டி முடிவில், மன வருத்தத்தை உண்டாக்கிய நிகழ்வாக இது மாறிவிட்டது. 

கால்பந்தின் எதிர்காலம் - இங்கிலாந்து, இத்தாலி நாடுகளிடமோ, ஜெர்மனி, ஸ்பெயின், டென்மார்க், பிரான்சு, அல்லது வேறு நாடுகளிடமோ இல்லை. கால்பந்தாட்டத்தின் எதிர்காலம், வெற்றியோ தோல்வியோ ஒரு வரையரைக்கு உட்பட்டு போட்டியை மட்டுமே கொண்டாட வேண்டும். வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் பங்களிப்பும் இதற்கு முக்கியம். இதில்தான், கால்பந்து ஆட்டத்தின் எதிர்காலம் உள்ளது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget