மேலும் அறிய

Year End Offer: எலக்ட்ரிக் கார் வாங்க ஆசை இருக்கா? லட்சங்களில் தள்ளுபடிகளை அள்ளி வீசிய உற்பத்தி நிறுவனங்கள்

Electric Vehicle Year End Offer: ஆண்டு இறுதியை ஒட்டி மின்சார கார்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அள்ளி வீசி வருகின்றன.

Electric Vehicle Year End Offer: ஆண்டு இறுதியை இந்திய மின்சார கார் சந்தையில், Mahindra XUV400 மாடலுக்கு அதிகபட்சமாக 4.2 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதி சலுகை:

ஆண்டு இறுதியையொட்டி விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில், ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில், மின்சார கார்களுக்கும் தற்போது சலுகைகள் அள்ளி வீசப்பட்டுள்ளன. விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் தொடங்கி, அதிகபட்சமாக 4.2 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது.  டிசம்பர் மாதம் முழுவதும் இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.

MG Comet: 

MG நிறுவனம் கடந்த மே மாதத்தில் அறிமுகப்படுத்திய கோமெட் வாகனமானது, இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார வாகனமாக உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.7.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு, பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ் ஆகியவேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில்,  MG கோமெட் மீது ரூ.65,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் மற்றும் பணத் தள்ளுபடி ஆகியவற்றை உள்ளடக்கி இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

MG ZS EV:

சில மாதங்களுக்கு முன்பு MG நிறுவனம் ZS மின்சார காரின் விலையை குறைத்தது. வேரியண்ட்களின் அடிப்படையில், விலைக் குறைப்பு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை மாறுபட்டது. இந்நிலையில், ZS மின்சார காரின் விற்பனைய ஊக்குவிக்கும் வகையில், மொத்தமாக 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலின்படி,  ZS EVக்கு ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. லாயல்டி மற்றும் கார்ப்பரேட் ஒப்பந்தங்களுடன் ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடியும் உள்ளது. MG ZS EV விலையானது ரூ.23.38 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Hyundai Kona EV:

Hyundai நிறுவனத்தின் Kona மின்சார வாகனத்திற்கு ரூ. 3 லட்சம் வரை ரொக்க தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ​​Kona EV மாடலின் விலை டெல்லியில் ரூ.23.84 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 134 bhp மற்றும் 395 Nm முறுக்குவிசையுடன் 39.2 kW பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.  ஸ்டேண்டர்ட் ஏசி சார்ஜருடன், கோனா 6 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது மற்றும் 50 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம், 57 நிமிடங்களில் 0-80 சதவீதத்திலிருந்து சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மஹிந்திரா XUV400:

மகேந்திரா XUV400 விரைவில் ஃபேஸ்லிஃப்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவியின் EL மாறுபாடு தற்போது ரூ.4.2 லட்சம் வரை பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த மாறுபாடு மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (ESC) அம்சம் இல்லாமல் வருகிறது. அறிக்கைகளின்படி, XUV400 ESC பதிப்புகள் ரூ. 3.2 லட்சம் வரை கவர்ச்சிகரமான தள்ளுபடியுடன் வருகின்றன. மஹிந்திரா தொடக்க நிலை EC மாறுபாட்டிற்கு ரூ.1.7 லட்சம் வரை சலுகைகளை வழங்குகிறது. 

இதேபோன்று டாடா டியாகோ மற்றும் டாடா டைகோர் மாடல்கள் மீது, அந்நிறுவனம் 1.10 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget