மேலும் அறிய

TVS Jupiter CNG: ரெடி மோடில் ஜுப்பிட்டர் சிஎன்ஜி ஸ்கூட்டர் - 230KM ரேஞ்ச், டிவிஎஸ்-சின் பட்ஜெட், லாஞ்ச் ப்ளான்

TVS Jupiter CNG: உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டராக ஜுப்பிட்டர் மாடலை, நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவில் சந்தைப்படுத்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 TVS Jupiter CNG: டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டரானது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு எரிபொருட்களையும் சேர்ந்த்து, 230 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்க வாய்ப்புள்ளதாம்.

டிவிஎஸ் ஜுப்பிட்டர் சிஎன்ஜி:

நிலையற்ற எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் மாற்று எரிபொருட்களை நோக்கி தீவிரமாக நகர தொடங்கியுள்ளனர். அதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசலை தாண்டி, சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களின் விற்பனையானது சீரான வளர்ச்சியை கண்டு வருகிறது. குறைந்த செலவில் நல்ல மைலேஜை எதிர்பார்க்கும் பயனர்களிடையே ஏற்கான்வே சிஎன்ஜி கார் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக அண்மையில் நாட்டின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளாக, பஜாஜ் ஃப்ரீடம் மாடலும் வெளியானது. அதன் தொடர்ச்சியாக உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டராக ஜுப்பிட்டர் 125 மாடலை டிவிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டரானது, நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜுப்பிட்டர் சிஎன்ஜி ஸ்கூட்டரின் விலை:

ஜுப்பிட்டர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி எடிஷன் மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும் என கூறப்படும் நிலையில், அதன் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரம்புக்குள்ளேயே இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஸ்ப்ளெண்டர் போன்ற மோட்ட்சார்சைக்கிள்களுக்கே இது போட்டி அளிக்க வாய்ப்புள்ளதாம். பட்ஜெட்டைப் பற்றி அதிகம் கவலைப்படும் 110சிசி பிரிவு வாடிக்கையாளர்களைக் கவர்வதே நிறுவனத்தின் இந்த உத்தியின் நோக்கமாகும். முழுமையாக பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த மாடல் ஒரு தூய்மையான மற்றும் சிக்கனமான மாற்றாக உருவெடுக்கலாம். TVS-இன் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மற்ற ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களும் சிஎன்ஜி எடிஷன் மீது கவனம் செலுத்தக்கூடுமாம்.

ஜுப்பிட்டர் சிஎன்ஜி - எரிபொருள் கொள்ளளவு, மைலேஜ்

ஜுப்பிட்டர் ஸ்கூட்டரானது 124.8சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட்  இன்ஜினை கொண்டு 7-8hp மற்றும் 9-9.4 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதற்கு தேவையான எரிபொருளிற்காக 1.4 கிலோ எடையிலான சிஎன்ஜிக்கான டேங்க் மற்றும் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் ஆகியவை வழங்கப்படுகின்றன. சிஎன்ஜி மட்டுமே ஒரு கிலோவிற்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க, பெட்ரோலையும் சேர்த்து இரண்டு டேங்குகளையும் முழுமையாக நிரப்பினால் சுமார் 226 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். 

ஜுப்பிட்டர் சிஎன்ஜி - வடிவமைப்பு

வாகனத்தின் வடிவமைப்பு என்பது நிலையான ஜுப்பிட்டர் 125 மாடலை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், இருக்கைக்கு கீழே சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட உள்ளதால், வாகனத்தின் சேமிப்பு திறன் கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் பயன்பாட்டை பயணத்தின்போதே மாற்றிக்கொள்வதற்கு ஏதுவான சுவிட்ச்சும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஜுப்பிட்டர் சிஎன்ஜி - படிப்படியாக அறிமுகம்?

நகர்ப்புற மக்களிடையே மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை நோக்கிய விருப்பம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில், சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் நெட்வொர்க் வலுவாக உள்ள நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். அதன்படி  டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்கள், ஜுப்பிட்டரின் சிஎன்ஜி எடிஷன் அறிமுகத்தைக் காணும் ஆரம்ப சந்தைகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Tata Punch EV: விலையோடு சேஃப்டியும் முக்கியம்ல.. டாப் டக்கரில் டாடா பஞ்ச் EV Facelift கார்: பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்!
Tata Punch EV: விலையோடு சேஃப்டியும் முக்கியம்ல.. டாப் டக்கரில் டாடா பஞ்ச் EV Facelift கார்: பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்!
மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாமா? வேண்டாமா? நல்ல மைலேஜ் கொடுத்தாலும் 3 பிளஸ் & மைனஸ் இருக்கு? - அது என்ன?
மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாமா? வேண்டாமா? நல்ல மைலேஜ் கொடுத்தாலும் 3 பிளஸ் & மைனஸ் இருக்கு? - அது என்ன?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget