மேலும் அறிய

Nissan Gravite: மொத்தமாக அள்ளிப் போட்டு வரும் க்ராவைட் - இல்லாத அம்சங்கள், வசதிகள் இல்லை - 5 கலர் ஆப்ஷன்கள்

Nissan Gravite MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான க்ராவைட் எம்பிவியில் இடம்பெற உள்ள, பல்வேறு அம்சங்கள் மற்றும் வசதிகளின் விவரங்களை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Nissan Gravite MPV: நிசான் க்ராவைட் எம்பிவியில் இடம்பெற உள்ள, பல்வேறு அம்சங்கள் மற்றும் வசதிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நிசான் க்ராவைட் எம்பிவி - வண்ண விருப்பங்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சூழலில், க்ராவைட் எம்பிபிவியின் புதிய டீசர் ஒன்றை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், வாகனத்தில் கிடைக்கக் கூடிய வெளிப்புற வண்ண விருப்பங்களின் விவரங்கள் உறுதியாகியுள்ளன.  ரெனால்ட் ட்ரைபர் உருவாக்கப்பட்ட அதே  CMF-A ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட, நிசானின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எம்பிவி தான் க்ராவைட் ஆகும். ஒட்டுமொத்தமாக வெளிப்புறத்தில் 5 வண்ண விருப்பங்கள் வழங்கப்பட உள்ளன. டாப் ரேஞ்ச்களுக்கு டீல் ஷேட் கவனத்தை ஈர்க்கும் ஆப்ஷனகாக வழங்கப்படலாம். கூடுதலாக வெள்ளை, சில்வர், கருப்பு மற்றும் க்ரே ஆகிய வண்ண விருப்பங்களையும் பயனர்கள் தேர்வு செய்யலாம்.

நிசான் க்ராவைட் எம்பிவி - காஸ்மெடிக் டச்

அழகு சாதனங்கள் அடிப்படையில், ரெனால்ட் ட்ரைபர் மாடலிலிருந்து வித்தியாசமாக தோன்றும் வேளையில், நவீனமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை க்ராவைட் கொண்டுள்ளது. முன்புறத்தில் கிடைமட்டமான எல்இடி பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் நேர்த்தியான முகப்பு விளக்கு செட்-அப்பை பெற்றுள்ளது. அகலமான கிரில், செதுக்கப்பட்ட பானெட் மடிப்புகள், மூக்கு பகுதியில் தடிமனான எழுத்துகளால் பொறிக்கப்பட்ட க்ராவைட் என்ற பெயர் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. பின்புறத்தில் அமைந்துள்ள ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள், பார்வைக்கு சுற்றி அமைந்துள்ள கிடைமட்டமான டெயில்கேட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மையப்பகுதியில் க்ராவைட் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 

நிசான் க்ராவைட் எம்பிவி - அம்சங்களும், வசதிகளும்

க்ராவைட்டின் உட்புறத்தில் இடவசதிக்கு முக்கியத்துவம் அளித்து, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய 3 வரிசை இருக்கை லே-அவுட்டை கொண்டுள்ளது. எம்பிவியில் இடம்பெறக்கூடிய அம்சங்கள் தொடர்பான விவரங்களை நிசான் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. அதேநேரம், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, ஸ்டியரிங்கில் கட்டமைக்கப்பட்ட கண்ட்ரோல் ஸ்விட்சுகள், நவீன கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நிசான் க்ராவைட் எம்பிவி - இன்ஜின், விலை, வெளியீடு

காருக்கு தேவையான ஆற்றலை உருவாக்குவதற்காக இதில், நேட்சுரல் ஆஸ்பிரேடட் மற்றும் டர்போசார்ஜ்ட் ஃபார்மில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித்தன்மையுடன் கூடிய விலையானது க்ராவைட்டின் மிகப்பெரிய பலமாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட் ட்ரைபரை போன்று க்ராவைட்டும் எம்பிவி பிரிவில் எண்ட்ரி லெவலில் எளிய அணுகலுக்காக நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாம். பிப்ரவரி மாதத்தில் சந்தைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று எஸ்யுவிக்களுக்கு ஸ்கெட்ச் போடும் நிசான்

இந்த காம்பாக்ட் MPV  ஆனது மூன்று-மாடல்களை சந்தைப்படுத்தும் நிசான் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில், வரும் பிப்ரவரி 4ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஐந்து இருக்கைகள் கொண்ட C-பிரிவு எஸ்யுவி ஆன டெக்டானும் அடங்கும். இதனை தொடர்ந்து 2027  ஒரு பெரிய மூன்று-வரிசை C-SUVயும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாடல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, சென்னை ஆலையில் இருந்து உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. க்ராவைட்டின் அசல் வெளியீட்டு தேதி கடந்த ஜனவரி 21ம் தேதியில் இருந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இது நடப்பாண்டில் இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் முதல் வெளியீடாக இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, டீலர்ஷிப் நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் விநியோகங்கள் மார்ச் மாதத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget