தெறிக்க விடும் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்!
Top 5 Scooters: நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற மற்றும் ஒரு லட்சத்திற்கும் சிறந்த மைலேஜ் தரும் 5 ஸ்கூட்டர்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் இருசக்கர வாகனம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு செல்வோர் மற்றும் அவசரமாக கடைக்கு செல்லவும் என பல்வேறு வகையில் ஸ்கூட்டர்கள் பெரும் உதவியாக இருந்து வருகிறது. அதுவும் நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற மற்றும் ஒரு லட்சத்திற்கும் சிறந்த மைலேஜ் தரும் 5 ஸ்கூட்டர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
டிவிஎஸ் என்டார்க் 125
இளைஞர்களை கவரும் வகையிலும் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் 124.8 சிசி 3-வால்வு இன்ஜின் கொண்டுள்ளது. புளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் போன்ற ஹை-டெக் அம்சங்களை கொண்டுள்ளது. மணிக்கு 95 கி.மீ. வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. ஒரு லிட்டருக்கு 40 முதல் 50 கிமீ வரை மைலேஜ் வழங்கும். அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.96,600 ஆகும்.
ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக்
ரெட்ரோ கலந்த மாடர்ன் லுக் கொண்ட இந்த ஸ்கூட்டர், மிகவும் குறைந்த விலையில் ஸ்டைலான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு இதை தேர்வு செய்யலாம். இதில், புளூடூத் இணைப்பு மூலம் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் மொபைல் சார்ஜிங் போர்ட் போன்ற ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. இதன் எடை குறைவாக இருப்பதால் கையாள்வது மிகவும் ஈஸியாக இருக்கும். ஹீரோ பிளெஷர் லிட்டருக்கு சுமார் 50 முதல் 55 கிமீ வரை மைலேஜ் தரும். ஆன்-ரோடு விலை ரூ.82,000 முதல் ரூ.87,000 வரை ஆகும்.
இதையும் படிங்க: முழு டேங்க் பெட்ரோலில் 1400 கி,மீ., போகும் Renault Duster Hybrid காரின் விலை எவ்வளவு தெரியுமா?
சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125
மேக்சி-ஸ்கூட்டர் வண்டி வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வாகும். நீண்ட தூரப் பயணங்களுக்கும் முதுகுவலி இன்றி உட்கார வசதியான இருக்கையைக் கொண்டுள்ளது. லேப்டாப் அல்லது ஹெல்மெட் வைக்க பெரிய அளவிலான அண்டர்-சீட் ஸ்டோரேஜ் மற்றும் ப்ளூடூத் வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உண்டு. லிட்டருக்கு சுமார் 45 முதல் 50 கிமீ வரை மைலேஜ் தரும். ஆரம்ப நிலை எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.95,000 முதல் தொடங்குகிறது.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி
இந்தியாவின் அடையாளமாக திகழ்வது ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா 6ஜி. இதன் டாப் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள 'ஸ்மார்ட் கீ' தொழில்நுட்பம் மூலம் சாவியைப் பயன்படுத்தாமலேயே வண்டியை எளிதாக இயக்க முடியும். டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருப்பதால் மேடு பள்ளமான சாலைகளிலும் பயணம் மிகவும் சொகுசாக இருக்கும். லிட்டருக்கு தோராயமாக 55 கி.மீ. வரை மைலேஜ் தரும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,378-ல் தொடங்குகிறது.
யமஹா ஃபாசினோ 125 எஃப்ஐ ஹைப்ரிட்
பெண்களும் எளிதில் கையாளும் வகையில் மிக இலகுவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 125 சிசி ஏர்-கூல்டு பிஎஸ்6 இன்ஜின் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மைலேஜில் சிறந்து விளங்கும் இந்த ஸ்கூட்டர் சுமார் 65 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும். இதன் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ.92,500 ஆகும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















