மேலும் அறிய

Top Selling Diesel Cars: சூப்பர் மைலேஜ்.. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 டீசல் கார்கள்- இதோ லிஸ்ட்!

Top Selling Diesel Cars India: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டீசல் கார்கள், 2026ஆம் நிதி ஆண்டிலும் ஆதிக்கம் செலுத்தப் போகும் டாப் 10 கார்களின் விற்பனை அறிக்கை

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், டீசல் கார்களுக்கான மவுசு மக்கள் மத்தியில் இன்னும் குறைந்தபாடில்லை.

அதிக மைலேஜ், சிறந்த இன்ஜின் செயல்திறன் மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற உறுதித்தன்மை ஆகிய காரணங்களால், எஸ்யூவி பிரியர்கள் எப்போதுமே டீசல் வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர். சமீபத்திய வாகன விற்பனை அறிக்கையின்படி, 2026-ஆம் நிதியாண்டிலும் குறிப்பிட்ட 10 டீசல் கார்கள் இந்தியச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தவுள்ளன.

இந்த டாப் 10 விற்பனைப் பட்டியலில், முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

கிராமப்புறங்களிலும் அதிக விற்பனை

அந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி மாடல்களான ஸ்கார்பியோ, பொலிரோ, எக்ஸ்யூவி700 மற்றும் லைஃப்ஸ்டைல் வாகனமான தார் ஆகிய கார்கள் அதிக வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ மாடல்கள் நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறச் சந்தைகளிலும் பிரம்மாண்டமான விற்பனையைப் பதிவு செய்துள்ளன. ஸ்கார்பியோ 170,372 கார்களும் பொலிரோ 1,10,136 கார்களும் விற்பனை ஆகியுள்ளன.


இதற்கு அடுத்தபடியாக, நடுத்தர எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலான க்ரெட்டா, டீசல் கார் விற்பனையிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதன் நவீன வடிவமைப்பு வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. க்ரெட்டா 91,907 யூனிட்டுகளும் தார் கார் 72,336 யூனிட்டுகளும் விற்பனை ஆகின. எக்ஸ்யூவி 700 44,546 கார்களையும் கிறிஸ்டா 37,090  கார்களையும் விற்பனை செய்துள்ளன.

அதேபோல, கியா செல்டோஸ் மாடலும் தனது டீசல் எஞ்சின் தேர்வால் கணிசமான விற்பனையைத் தக்கவைத்துள்ளது. இந்த வகை கார்கள் 31,784 யூனிட்டுகளை விற்பனை செய்தன.

சொகுசு வாகனப் பிரிவில் எப்படி?

பிரீமியம் மற்றும் சொகுசு வாகனப் பிரிவைப் பொறுத்தவரை, டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய இரண்டு மாடல்களும் தங்களின் தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளன. நீண்ட உழைப்பு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக இவை வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக உள்ளன. இன்னோவா  37,090 யூனிட்டுகளையும் ஃபார்ச்சூனர் 34,157 யூனிட்டுகளையும் விற்பனை செய்துள்ளன.

இந்த ஜாம்பவான்களுக்கு மத்தியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவையும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பான டீசல் எஞ்சின் செயல்திறனுடன் இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

இந்தியச் சந்தையை ஆளும்

இந்த 10 டீசல் கார்களும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தொடர்ந்து சிறந்து விளங்குவதால், 2026 ஆம் நிதியாண்டிலும் இவையே இந்தியச் சந்தையை ஆளும் என ஆட்டோமொபைல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
Platina on EMI: டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Theni Murder : 2 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 3 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை.! பீதியில் மக்கள்- தேனியில் நடந்தது என்ன.?
2 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 3 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை.! வெளியான ஷாக் தகவல்- தேனியில் நடந்தது என்ன.?
Embed widget