மேலும் அறிய

Renault Mini Duster: குட்டி போடும் டஸ்டர் - ப்ரேஸ்ஸா, நெக்சானை குறிவைக்கும் ரெனால்ட் - காம்பேக்ட் எஸ்யுவிக்கு போட்டி

Renault Mini Duster Compact SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் தடம் பதிக்கும் வகையில், மினி டஸ்டர் மாடலை ரெனால்ட் தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Renault Mini Duster Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் நெக்ஸான் மற்றும் ப்ரேஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக,  மினி டஸ்டர் மாடலை ரெனால்ட் தயார் செய்வதாக கூறப்படுகிறது.

ரெனால்ட் மினி டஸ்டர் ஆன் தி வே?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவான கம்பேக்கை பதிவு செய்ய அண்மையில் தான், புதிய தலைமுறை டஸ்டர் கார் மாடலை அறிமுகப்படுத்தியது. ஆனால், வெற்றிக்கு அந்த ஒரு மாடலை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது என்பதை ஃப்ரான்ஸ் நிறுவனம் உணர்ந்துள்ளது. எனவே, புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் வேகத்தை தீவிரப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, ஆண்டிற்கு குறைந்தது ஒரு மாடலையாவது அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டஸ்டரின் 7 சீட்டர் எடிஷன் விரைவில் சந்தைக்கு வரும் என கூறப்படும் நிலையில், அதோடு மட்டும் நிற்காமல் மினி  டஸ்டர் மாடலிலும் ரெனால்ட் பணியாற்றி வருகிறதாம். இதன் மூலம் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவிலும் தாக்கத்தை ஏற்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

புதிய காம்பேக்ட் எஸ்யுவி - வடிவமைப்பு விவரங்கள்

சப்-காம்பேக்ட் பிரிவில் ரெனால்ட் நிறுவனம் சார்பில் ஏற்கனவே கைகர் மாடல் உள்ளது. கவனிக்கத்தக்க வகையிலான அப்க்ரேட்களை சேர்த்து கடந்த 2025ம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தைப்படுத்தியும், விற்பனையில் இந்த கார் பெரிய வளர்ச்சியை எட்டமுடியாமல் தவித்து வருகிறது. ஆண்டுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 200 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் அதிக நேர்மையான மற்றும் பாக்ஸி எஸ்யுவிக்களையே விரும்பும் நிலையில், கைகர் மாடல் கொண்டுள்ள க்ராஸ்ஓவர் - எஸ்க்யூ தோற்றம் பெரிதும் கவரவில்லை என்பதே உண்மை.

அந்த பிரச்னைக்கான தீர்வாகவே புதிய மினி-டஸ்டர் கொண்டுவரப்பட உள்ளது. உண்மையான டஸ்டரின் கரடுமுரடான மற்றும் உண்மையான எஸ்யுவி நிலைப்பாடு அதன் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். புதிய டஸ்டரில் இந்த அம்சங்கள் அப்படியே பின்பற்றப்பட்டு, கைகரில் இருந்து வேறுபடும் விதமாக நேர்மயான மற்றும் பாக்ஸி தோற்றத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், கரடுமுரடான ரக்கட் க்ளாடிங் மற்றும் பெரிய சக்கரங்கள் போன்ற வழக்கமான எஸ்யுவி அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது.


Renault Mini Duster: குட்டி போடும் டஸ்டர் - ப்ரேஸ்ஸா, நெக்சானை குறிவைக்கும் ரெனால்ட் - காம்பேக்ட் எஸ்யுவிக்கு போட்டி

புதிய காம்பேக்ட் எஸ்யுவி - அம்சங்கள்

மினி டஸ்டரில் ப்ராமினண்ட் க்ரில், கூர்மையான லைட்டிங் எலிமெண்ட்கள், கரடுமுரடான முன் மற்றும் பின்புற பம்பர்கள், செதுக்கப்பட்ட பானெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் வலுவான க்ளாடிங், ப்ளாக்ட் - அவுட் பில்லர்ஸ், ரூஃப் ரெயில்ஸ், ஸ்போர்ட்டி அலாய் வீல்ஸிற்கு வாய்ப்புள்ளது. தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்  கிட்டத்தட்ட புதிய தலைமுறை டஸ்டரில் இருப்பதை போன்றே பின் தொடரப்படலாம் என கூறப்படுகிறது.

மினி டஸ்டர் - இன்ஜின் விவரங்கள், வெளியீடு

பவர்ட்ரெயினில் எந்த மாற்றமும் இன்றி, கைகரில் இருக்கும் அதே 1 லிட்டர் டர்போ பெட்ரோல்  இன்ஜின் மினி டஸ்டரில் தொடர உள்ளதாம். இதற்கு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெறக்கூடும். அவை முறையே, 160 Nm மற்றும் 152 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த பெயரிடப்படாத புதிய எஸ்யுவி ஆனது, டஸ்டரின் 7 சீட்டர் எடிஷனுக்கு பிறகே விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 2027-28 காலகட்டங்களில் டஸ்டரின் மினி-எடிஷன் விற்பனைக்கு வரலாம். மிகவும் போட்டித்தன்மையுடன் கூடிய விலை பட்டியலை பெறக்கூடுமாம்.

புதிய காம்பேக்ட் எஸ்யுவி - போட்டியாளர்கள்

ரெனால்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான மனைநிலை கொண்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகமாக உள்ளன. இந்த நடைமுறையானது உள்நாட்டு சந்தையில் பல ப்ராண்ட்களால் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாருதியின் ப்ரேஸ்ஸா-ஃப்ராங்க்ஸ், டாடா நெக்ஸான் - பஞ்ச், ஹுண்டாயின் வென்யு - எக்ஸ்டெர் மற்றும் கியாவின் சோனெட் - சைரோஸ் ஆகியவை இதற்கு உதாரணமாகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget