மேலும் அறிய

புதிய அவதாரத்தில் பஜாஜ் பல்சர் RS200..அசத்தும் அம்சங்கள்..என்னென்ன மாற்றங்கள்? விலை எவ்வளவு?

2026 பஜாஜ் பல்சர் RS200 இந்தியாவில் ரூ. 1.98 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 5-இன்ச் TFT, ரைடு மோட்கள் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்கள் குறித்து பார்க்கலாம்

இளைஞர்களின் விருப்பமான ஸ்போர்ட்ஸ் பைக்கான பல்சர் RS200 பல நவீன அப்டேட்களுடன் புதிய எடிஷனாக அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.98 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பல்சர் NS200 மாடலில் வழங்கப்பட்ட அதே நவீன தொழில்நுட்பங்கள், தற்போது RS200 பைக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எலக்ட்ரானிக் த்ராட்டில் பாடி, ரைடு மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் குயிக்ஷிஃப்டர் ஆகியவை இந்த பைக்கின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளன. இந்தப் புதிய அம்சங்களால், முந்தைய மாடலை விட இதன் விலை ரூ. 17,000 அதிகரித்துள்ளது.

அதிகரித்த இன்ஜின் பவர் 

புதிய 2026 பல்சர் RS200 பைக்கில் அதே 199.5சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள Electronic Throttle Body காரணமாக இன்ஜின் திறன் 1hp அதிகரித்து, இப்போது 25.5hp பவரை வெளிப்படுத்துகிறது. டார்க் அளவில் எந்த மாற்றமும் இன்றி 18.7Nm-ஆகவே தொடர்கிறது. மேலும், ரைடர்களின் வசதிக்கேற்ப பல்வேறு ரைடு மோட்கள், பாதுகாப்பிற்கான டிராக்ஷன் கண்ட்ரோல்  மற்றும் கியர் மாற்றத்தை எளிதாக்கும் குயிக்ஷிஃப்டர் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

கூகுள் மேப்ஸ் வசதியுடன் புதிய 5-இன்ச் TFT திரை

பழைய மாடலில் இருந்த LCD மீட்டருக்கு விடைகொடுத்துவிட்டு, 5-இன்ச் அளவிலான நவீன TFT டிஜிட்டல் கன்சோலை பஜாஜ் இதில் பொருத்தியுள்ளது. இதன் முக்கியச் சிறப்பம்சமே இதில் உள்ள Google Maps Mirroring வசதிதான். இதன் மூலம் பயணத்தின் போது வழித்தடங்களை பைக்கின் திரையிலேயே எளிதாகப் பார்க்க முடியும். இத்துடன், கைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளக்கூடிய லீவர்கள், USB டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஹசார்ட் ஸ்விட்ச் ஆகியவையும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

 USD சஸ்பென்ஷன்

பைக்கின் கையாளுமை  மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் விதமாக, சஸ்பென்ஷன் அமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இருந்த பாரம்பரிய டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளுக்குப் பதிலாக, தற்போது 37mm அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்ஜின், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் என அனைத்திலும் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பைக்கிற்கு ஒரு பிரீமியம் தோற்றத்தையும் சிறப்பான ஓட்டும் அனுபவத்தையும் தருகின்றன.

எந்த பைக் எல்லாம் போட்டி?

ரூ. 17,000 விலை உயர்வுக்குப் பிறகு, 2026 பஜாஜ் பல்சர் RS200-ன் விலை ரூ. 1.98 லட்சமாக உள்ளது. 200சிசி ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் இதன் நேரடிப் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, ஹீரோ கரிஸ்மா ரூ. 1.86 லட்சமாகவும், 2026 பஜாஜ் பல்சர் RS200 ரூ. 1.98 லட்சமாகவும் கேடிஎம் RC 200 ரூ. 2.33 லட்சமாகவும் உள்ளது.
அதாவது, கரிஸ்மா XMR-ஐ விட சற்று விலை அதிகமாக இருந்தாலும், கேடிஎம் RC 200-ஐ விட மிகவும் குறைவான விலையில் அதிக நவீன அம்சங்களைக் கொண்ட பைக்காகப் புதிய பல்சர் RS200 களமிறங்கியுள்ளது.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

December Car Launch: ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
Hyundai Verna: ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
Honda Rebel 500: என்ஃபீல்டிற்கு டஃப் கொடுக்கும் நோக்கில் ஹோண்டா ரெபெல் 500 - விலை, அம்சங்கள் எப்படி?
என்ஃபீல்டிற்கு டஃப் கொடுக்கும் நோக்கில் ஹோண்டா ரெபெல் 500 - விலை, அம்சங்கள் எப்படி?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Hemorrhoids: இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
Embed widget