மேலும் அறிய

solar electric car: இந்தியாவின் முதல் சோலார் எலெக்ட்ரிக் கார்.. அசத்தும் அம்சங்களுடன் கூடிய ரேன்ஜ் விவரங்கள்

இந்தியாவின் முதல் சோலார் - எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக, பல்வேறு நாடுகளிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் மின்சார வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சந்தையில் கோலோச்சி வரும் நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூட மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தான், அதன் அடுத்த கட்டமாக நாட்டின் முதல் சோலார் - எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோலார் - எலெக்ட்ரிக் கார்: 

வேவ் மொபிலிட்டி எனும் நிறுவனம் இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. புனேவை சேர்ந்த இந்நிறுவனத்தின் சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் இவா எனும் பெயரில் விற்பனைக்கு வர உள்ளது. சூரிய சக்தியை ஆற்றலாக மாற்றும் சோலார் பேனல்களை ரூஃப் மீது கொண்ட இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் வேவ் நிறுவனத்தின்  இவா மாடல் தான்.

ரேன்ஜ் விவரம்:

இதில் உள்ள 150 வாட் பேனல்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளன. இது ஆண்டுக்கு 3 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில் 14 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரியை வீடுகளில் உள்ள சாக்கெட் சார்ஜர் மூலம் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். அவ்வாறு இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு:

இவா  காரின் வடிவமைப்பு பணிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் உள்ள 6 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சம் 12 கிலோவாட் அல்லது 16 ஹெச்பி பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ள இந்த கார், மணிக்கு 40 கிலோமீட்டர் எனும் வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும். 550 கிலோ எடையை கொண்டுள்ள வேவ் இவா சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் மாடலில், பெரியவர்கள் இருவரும், சிறுவர் ஒருவரும் பயணம் செய்ய முடியும். 

சிறப்பம்சங்கள்:

 இவாவில் உள்ள சோலார் பேனல்கள் காரை இயக்குவதற்கான சக்தியை வழங்குகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சராசரியாக 30 கிலோமீட்டர் வரை பயணம் செய்கின்றனர். அந்த வகையில், வேவ் இவோ மாடல் 30 சதவீத டிரைவிங் ரேன்ஜ்-ஐ சூரியசக்தி மூலமாகவே வழங்கிவிடும். வேவ் விவா மாடல் மைக்ரோ கார் ஆகும். இது தோற்றத்தில் வழக்கமான கார்களை விட வித்தியாசமாக இருக்கிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Kia Seltos: வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget