நாயகன் மீண்டும் வர்றான்.. ஆஃப் ரோடில் அசத்த வரப்போது Hero Impulse 160 பைக் - வெயிட்டிங்!
ஹீரோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் Hero Impulse 160 பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று ஹீரோ. இவர்களின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று hero xpulse. ஹீரோ நிறுவனம் புதியதாக இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் Hero Impulse 160.
இந்த பைக்கில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. Impulse Name Could Return:
ஹீரோ நிறுவனத்தின் புகழ்பெற்ற இரு சக்கர வாகனமாக திகழ்ந்தது Impulse. ஆஃப் ரோட் பைக்கான இந்த பைக் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்திய சந்தையில் இதே பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2. 163.2 cc Engine:
ஹீரோ அறிமுகப்படுத்த உள்ள இந்த புதிய பைக்கில் 163.2 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 16.9 எச்பி குதிரை ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 14.6 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
3. 19 இன்ச், 17 இன்ச் அலாய் சக்கரங்கள்:
இந்த புதிய 163.2 cc Engine பைக்கில் 19 இன்ச் மற்றும் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்படும் என்று கருதப்படுகிறது. இந்த பைக் ஆஃப் ரோட் பைக் என்பதால் இதில் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கம் உளளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட உள்ளது.
4. ப்ரேக்குகள்:
ஆஃப்ரோட் வாகனம் என்பதால் மட்கார்ட் வசீகரமாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிம் சைட் பேனல்ஸ் வசதி உள்ளது. டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. இதில் டிஎஃப்டி ரிசர்வ்ட் டிஸ்ப்ளே பொருத்தப்படும் என்று கருதப்படுகிறது. சுவிட்சபிள் ஏபிஎஸ் வசதி உள்ளது, ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி வடிவமைக்கப்படுகிறது. எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என்று கருதப்படுகிறது.
5. விலை:
இந்த புதிய Hero Impulse 160 பைக்கின் விலை மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது. எக்ஸ்பல்ஸ் பைக்கின் விலை ரூபாய் 1.48 லட்சம் ஆகும். இந்த புதிய பைக்கின் விலை ரூபாய் 1.35 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், இந்த பைக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியாவில் ஆஃப் ரோட் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹீரோ நிறுவனமும் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஹீரோ நிறுவனத்தின் இந்த பைக் இந்திய சந்தையில் அறிமுகமானால் ஆஃப் ரோட் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















