மேலும் அறிய

Mercedes AMG E53: முற்றிலும் புதிய வடிவமைப்பில் வெளியாகியுள்ள மெர்சிடிஸ் AMG கார்.. விலை விவரங்கள் உள்ளே!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

சொகுசு கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து புதிய மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், பேட்ஜ் அடிப்படையில் மெர்சிடஸ் நிறுவனம் கார்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் 53 பேட்ஜில் ஏற்கனவே E 53 செடான், ஜிஎல்இ 53 கூப் - எஸ்யுவி மற்றும் இக்யூஎஸ் 53 செடான் ஆகிய மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன. அந்த பேட்ஜை சேர்ந்த நான்காவது மாடலாகவும், முதல் கப்ரியோலெட் மாடலாகவும் இந்திய சந்தையில் மெர்சிடஸ் நிறுவனம் புதிய காரை  அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கார் அறிமுகம்:

அதன்படி, நடப்பாண்டில் மெர்சிடஸ் நிறுவனத்தின் முதல் காராக AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் தொடக்க விலை ரூ. 1 கோடியே 30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள E 53 செடான் மாடல் காரின் விலையை காட்டிலும், புதிய காரின் விலை ரூ.24 லட்சம் அதிகம் ஆகும்.

இன்ஜின் திறன்:

புதிய AMG E53 காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இன்ஜின் உடன், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 430 குதிரைகளின் சக்தியையும், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. கூடுதலாக, இதன் 48 வோல்ட் சிஸ்டம் 21 குதிரைகளின் சக்தி மற்றும் 250 நியூட்டன் மீட்டர் இழுவிசை திறனையும் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.  இதன் மூலம் புதிய AMG E53  மாடல் காரானது ஜீரோவிலிருந்து 100 கிலோமீட்டர் எனும் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு  250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என மெர்சிடஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வண்ணங்களில் விற்பனை:

இரு கதவுகள் கொண்ட சாஃப்ட்-டாப் E கிலாஸ் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் E53 செடான் மாடலின் பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஃபேப்ரிக் ரூஃப், பின்புற கதவுகள் நீக்கப்பட்டு, தனித்துவம் மிக்க ரியர் டிசைன் உள்ளிட்டவை புதிய AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடலிலும் உள்ளது.  மெர்சிடிஸ் AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடல்- அப்சிடியன் பிளாக், ஸ்லெனைட் கிரே, டெசிக்னோ ஒபலைட் வைட் பிரைட், டிசைனோ ஸ்பெக்ட்ரல் புளூ மேக்னோ மற்றும் டிசைனோ படகோனியா ரெட் பிரைட் என ஐந்து விதமான வண்ணங்களில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் காருக்கு நேரடி போட்டியாளராக எந்த காரும் இல்லை.

இதர சிறப்பம்சங்கள்:

மற்ற AMG மாடல்களை போன்றே புதிய E53 மாடலிலும் மெர்சிடிஸ் பாரம்பரியம் மிக்க பானாமெரிகானா கிரில், எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், பிராமண்ட பம்ப்பர் உள்ளது. கப்ரியோலெட் மாடல் அதன் இரு கதவுகள் கொண்ட லே-அவுட் மற்றும் மடிக்கக்கூடிய சாஃப்ட்-டாப் மூலம் தனித்துவ தோற்றம் கொண்டுள்ளது. இதன் பின்புறம் நீண்ட டெக், மெல்லிய டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.  உள்புறம் ஒற்றை டிஸ்ப்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் செண்ட்ரல் டச் ஸ்கிரீன் போன்று செயல்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Pulsar 150 New Vs Old Model: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
Kia Sonet on EMI: ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Tata Sierra EV with 5G: டெக்னாலஜியில் தட்டித் தூக்கிய டாடா.! நாட்டின் முதல் 5G இணைப்புள்ள காராகும் சியரா EV; முழு விவரம்
டெக்னாலஜியில் தட்டித் தூக்கிய டாடா.! நாட்டின் முதல் 5G இணைப்புள்ள காராகும் சியரா EV; முழு விவரம்
Suzuki e SKY Mini EV: 310 கிமீ ரேஞ்ச்.! WagonR போன்றே ஜப்பானில் சுஸுகி அறிமுகம் செய்யும் இ ஸ்கை; இந்தியாவுக்கு வருமா, வராதா.?
310 கிமீ ரேஞ்ச்.! WagonR போன்றே ஜப்பானில் சுஸுகி அறிமுகம் செய்யும் இ ஸ்கை; இந்தியாவுக்கு வருமா, வராதா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Nepal Flood: பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
3 Consecutive Days Holidays : செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
Holiday Special Bus : வார விடுமுறை, சுபமுகூர்த்தம், பௌர்ணமி கிரிவலம்! வெளியூர் செல்ல திட்டமா? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
வார விடுமுறை, சுபமுகூர்த்தம், பௌர்ணமி கிரிவலம்! வெளியூர் செல்ல திட்டமா? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
Embed widget